அயோத்தி ராமர் கோயில் தொடர்பான சுப்பிரமணியன் சுவாமி மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

By பிடிஐ

அயோத்தி ராமர் கோயில் தொடர்பான மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டுமென்று பாஜக தலைவர் சுப்பிரமணிய சுவாமியின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் இன்று நிராகரித்தது

சர்ச்சைக்குரிய வழக்கை அவசர விசாரணைப் பட்டியலில் சேர்க்கும்படி கேட்டிருந்த இம் மனுவை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர் மற்றும் டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் உள்ளடங்கிய அமர்வு இன்று பரிசீலித்தது.

இவ்வழக்கை அவசரப் பட்டியலில் சேர்த்து உடனடியாக  விசாரிக்க வேண்டும் என்ற அவரது வேண்டுகோளுக்குப் பதிலளித்த அமர்வு, ''பின்னர் விசாரிக்கப்படும்'' என்று பதிலளித்தது.

''தாங்கள் குறிப்பிடும் வழக்கு மீண்டும் பின்னர் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்'' என்று அமர்வு தெரிவித்தபோது, அப்போது குறுக்கிட்ட சுப்பிரமணிய சுவாமி, ''பின்னர் என்பது தெளிவாக இல்லை, எனவே 15 நாட்களுக்குப் பிறகு இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்'' என்று அவர் திரும்பவும் தனது வேண்டுகோளை வலியுறுத்திப் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்