சாலை மறியலில் ஈடுபட்ட நடிகை ரோஜா மீது போலீஸார் வழக்கு பதிவு

By என்.மகேஷ் குமார்

நகரி தொகுதி எம்.எல்.ஏவும், நடிகையுமான ரோஜா மீது ஆந்திர மாநிலம், சித்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் நடவடிக்கை களை ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்எல்ஏவும் நடிகையுமான ரோஜா கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில் கட்சி சார்பில், கடந்த 24ம் தேதி செவ்வாய்க்கிழமை மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி பந்த் நடத்தப்பட்டது. இதில், இக்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏக்கள், முன்னாள் எம்பிக்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் காலை முதலே பஸ் நிலையங்களிலும், சாலைகளிலும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவர்களை அன்றே போலீஸார் கைது செய்து, சொந்த ஜாமீனில் மாலை விடுதலை செய்தனர். இதில், மாநில மகளிர் அணி தலைவியும், நகரி தொகுதி எம்.எல்.ஏவும், நடிகையுமான ரோஜா புத்தூரில், சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டார்.

இதனால், இவர் மீது ஐபிசி 143, 146, 341, 353, 506 ஆகிய பிரிவுகளின் கீழ் சித்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

39 mins ago

இந்தியா

58 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

மேலும்