உத்தரகாண்ட் மாநிலம், பாரி மாவட்டத்தில் 200 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்துவிபத்துக்குள்ளானதில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பலியானார்கள், ஏராளமானோர் காயமடைந்தனர்.
பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.
உத்தரகாண்ட் மாநிலம், பாரி மாவட்டத்தில் பாகுன் நகரில் இருந்து ராம் நகருக்கு தனியார் பஸ் ஒன்று இன்று காலை 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்டது. மலைப்பகுதிச் சாலை என்பதை அறியாமலும், பஸ்ஸில் அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றியதாகக் கூறப்படுகிறது.
கிவீன் கிராமம் அருகே பஸ் வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலை ஓரத்தில் இருந்த 200 அடிபள்ளத்தாக்கில் கவிழ்ந்து, உருண்டது. இந்த விபத்தில் பஸ் பெருத்த சேதமடைந்தது. பஸ்ஸின் மேற்கூரையின் மீதும், பஸ்ஸுக்குள் அமர்ந்திருந்த பயணிகள் தூக்கி வீசி எறியப்பட்டனர். இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 40-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். ஏராளமானோர் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்து குறித்து அப்பகுதி மக்கள் போலீஸுக்கும், மீட்பபுப்படைக்கும் தகவல் அளித்தனர். அவர்கள் விரைந்து வந்து பள்ளத்தாக்கில் பஸ்ஸில் இருந்த பயணிகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து பாரி மாவட்ட போலீஸ் எஸ்பி ஜாகத் ராம் ஜோஷி கூறுகையில், பாரி மாவட்டத்தில் பாகும் நகரில் இருந்து ராம் நகர் சென்ற தனியார் பஸ் கிவீன் கிராமம் அருகே வந்தபோது, பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 40-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இதுவரை 40 உடல்களைக் கைப்பற்றியுள்ளோம். படுகாயமடைந்த நிலையில் 12 பயணிகள் மீட்கப்பட்டு துமாகோட் நகர மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சுகிறோம்.
இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். மீட்புப்பணியில் தீயணைப்பு துறையினருடன் இணைந்து, போலீஸாரும் ஈடுபட்டு வருகின்றனர் எனத் தெரிவித்தார்.
முதல்வர், ஆளுநர் வருத்தம்
இந்த விபத்து குறித்து அறிந்த முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், ஆளுநர் கே.கே.பால் ஆகியோர் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கவும் மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளனர்.
பிரதமர் மோடி இரங்கல்
இந்த விபத்துக்கு அறிந்த பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் ட்விட்டரில் கூறுகையில், உத்தரகாண்ட் பாரி கார்வால் மாவட்டத்தில் நடந்த பேருந்து விபத்தைக் கேட்டு நான் மிகவும் வேதனை அடைந்தேன். உறவுகளை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். மீட்புப்பணிகளையும், தேவையான உதவிகளையும் உடனடியாக வழங்க அரசைக் கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
15 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
55 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago