மத்திய அரசின் புதிய சட்டத் திருத்தத்தால் உ.பி.யில் வக்பு சொத்துகளை பதிவு செய்வதில் சிக்கல்

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: மத்​திய அரசின் புதிய சட்​டத் திருத்​தத்​தால், உத்​தரபிரதேசத்​தில் வக்பு வாரிய சொத்​துகளை பதிவு செய்​வது பெரும் சவாலாகி உள்ளது.

வக்பு சட்​டத் திருத்​தம் நாடாளு​மன்​றத்​தில் நிறைவேற்​று​வதற்கு முன், உ.பி.​யில் ஷியா மற்​றும் சன்னி வக்பு வாரி​யங்​கள் எந்த தலை​யீடும் இல்லாமல் சொத்​துகளை பதிவு செய்ய முடிந்​தது. புதிய சட்​டம் அமலான பிறகு, அதில் குறிப்​பிட்ட விதி​முறை​களை பூர்த்தி செய்​தால் மட்​டுமே அவை வக்பு சொத்​துகளாக பதிவு செய்​யப்​படும். அவற்​றில் முக்​கிய​மாக வக்பு சொத்​துகள் 1952 வரு​வாய் பதிவு​களில் பட்​டியலிடப்பட வேண்​டும்.

மேலும், சொத்தை வழங்​கிய நபரின் பெயரும் அதில் இடம்​பெற வேண்​டும். இதுதொடர்​பாக உ.பி. வக்பு வாரி​யங்​கள் இனி புதிய அறி​விப்​பு​களை வெளி​யிட வேண்​டும்.

இதை செய்து முடித்த பிறகு வக்பு வாரி​யங்​கள் அனுப்​பும் சொத்து ஆவணங்​கள், 1952 வரு​வாய் பதிவு​களில் உள்​ளதா என்று தாலுகா அலு​வலக அதி​காரி​கள் ஆய்வு செய்​வார்​கள். அதன் பிறகு​தான் சொத்​துகள் பதிவு செய்​யப்​படும்.

இதனால், உ.பி. வக்பு வாரி​யங்​கள் தங்​களு​டைய சொத்​துகளுக்கு உரிமை​ கோர மாநில அரசிடம் கடுமை​யாக வாதிடும் நிலை உரு​வாகி உள்​ளது. உ.பி.​யில் ஷியா, சன்னி வக்பு வாரி​யங்​களின் பதிவு​களில் சுமார் 1,32,140 சொத்​துகள் பட்​டியலிடப்​பட்​டுள்​ளன. ஆனால், 2,528 சொத்​துகள் மட்​டுமே மாநில அரசின் வரு​வாய் பதிவு​களில் உள்​ள​தாக மாநில சிறு​பான்மை நலத்​துறை தெரி​வித்​துள்​ளது.

இந்​நிலை​யில், மீத​முள்ள சொத்​துகளை பதிவு செய்​வது புதிய வக்பு சட்​டத்​தால் மிக​வும் சிக்​கலாகி உள்​ளது. உ.பி.​யில் மசூ​தி​கள், இமாம்​பாடாக்கள் மற்​றும் கல்​லறை​கள் உட்பட பல வக்பு சொத்​துகள் அரசுக்கு சொந்​த​மானவை என்று மாநில அரசு கூறியது சர்ச்​சை​யானது.

முகலாயர், ஆங்கிலேயர்: ஏனெனில், அரசு கூறும் சொத்​துகள் அனைத்​தும் இந்​திய சுதந்​திரத்​துக்கு முன்பு முகலாயர்​கள் மற்​றும் ஆங்கிலேயர்கள் உள்​ளிட்ட முன்​னாள் ஆட்​சி​யாளர்​களால் வழங்​கப்​பட்​ட​வை. இந்த சொத்​துகளில் பலவும் வரலாற்று முக்​கி​யத்​து​வம் வாய்ந்​தவை. இதனால், அவற்றை அரசு சொத்​தாக கருத கூடாது என்று உ.பி. வக்பு வாரி​யங்​கள் வாதிடு​கின்​றன.

புதிய சட்​டத்​தின்​படி, வக்பு வாரி​யங்​கள் தங்​களு​டைய முந்​தைய அறி​விப்​பு​களை ரத்து செய்து புதிய சொத்​துகள் பட்​டியலை வெளி​யிட வேண்​டும் என்று கூறப்​பட்​டுள்​ளது. இதில் 1952 பதிவு​களில் உரிமை சரி​பார்ப்பு மற்​றும் அரசு நில​மாக வகைப்​படுத்​தப்​ப​டாதது பெரும் சிக்​கலை ஏற்​படுத்தி உள்​ளது. புதிய சட்​டத்​தின்​படி சொத்து ஆவண பதிவு​களில் தாலுகா நிர்​வாகம் முரண்​பாடு​களை கண்​டறிந்​தாலோ அல்​லது உரிமை கோரல்​கள் புதிய விதி​முறை​களை பூர்த்தி செய்​ய​வில்லை என்​றாலோ நிராகரிக்​கப்​படும் வாய்ப்​பு​கள் உள்​ளன.

இதனால், வக்பு வாரி​யங்​களின் கட்​டுப்​பாட்​டில் உள்ள சொத்​து​களில் கணிச​மாக இழக்க நேரிடும் என்​கின்​றனர். மேலும் வக்பு சொத்​துகள் அரசு சொத்​தாக மாறி​விடும் வாய்ப்​பு​கள் உள்​ளன. இது​போன்ற சிக்​கல்​களால் வக்பு சொத்​துகள் தொடர்​பாக நீதி​மன்​றங்​களில்​ வழக்​கு​கள்​ குவி​யும்​ என்று எதிர்​பார்க்​கப்​படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

மேலும்