ஆனந்த் அம்பானியின் 170 கி.மீ. பாதயாத்திரை நிறைவு

By செய்திப்பிரிவு

மும்பை: ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி. அவரது மகன் ஆனந்த் அம்பானி. இவர் தனது 30 பிறந்தநாளையொட்டி துவாரகாதீஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்கான பாதயாத்திரையை குஜராத்தின் ஜாம் நகரில் இருந்து கடந்த மார்ச் 29-ம் தேதி தொடங்கினார்.

அவரது 170 கி.மீ. நடைப் பயணம் 8 நாட்களுக்குப் பிறகு நேற்று நிறைவடைந்தது. அப்போது தன்னுடன் ஆன்மிக பயணத்தில் கலந்து கொண்ட மக்களுக்கு ஆனந்த் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

துவாரகாதீஸ்வரர் கோயிலில் பாதயாத்திரையை ஆனந்த் அம்பானி நேற்று நிறைவு செய்த போது அவரது மனைவி ராதிகா மெர்ச்செண்ட் மற்றும் தாயார் நீட்டா அம்பானி ஆகியோர் உடனிருந்தனர்.

ராதிகா மெர்ச்செண்ட் கூறுகையில், “ பாதயாத்திரையில் ஆனந்த் அம்பானியுடன் இணைந்த பயணித்த மக்கள் அனைவருக்கும் நன்றி. கடந்தாண்டு திருமணத்துக்குப் பிறகு நடைபயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். கடவுளின் அருளால் தற்போதுதான் அது நிறைவேறியுள்ளது" என்றார்.

ஆனந்த் அம்பானி கூறுகையில், “ இது எனது சொந்த ஆன்மிக பயணம். கடவுளின் பெயரால் பாதயாத்திரையை தொடங்கி முடித்துள்ளேன். இதற்காக, துவாரகாதீஸ்வரருக்கு நன்றி. என்னுடன் ஆன்மிக பயணத்தில் இணைந்து யாத்திரையை மேற்கொண்ட மக்களுக்கு நன்றியுள்ளவனாக இருப்பேன். ஜாம்நகர்-துவாரகா யாத்திரை திட்டத்தை எனது தந்தை முகேஷ் அம்பானியிடம் தெரிவித்தபோது அவர் இதற்கு மிகப்பெரிய அளவில் ஊக்கத்தை வழங்கினார். அதற்கும் நன்றி தெரிவிக்கிறேன்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

மேலும்