27-ம் தேதி சந்திர கிரகணத்தையொட்டி ஏழுமலையான் கோயில் 11 மணி நேரம் நடை அடைப்பு

By என்.மகேஷ் குமார்

சந்திர கிரகணம் வரும் 27-ம் தேதி வருவதையொட்டி, அன்றைய தினம், மாலை 5 மணி முதல் மறுநாள் அதிகாலை 4 மணி வரை தொடர்ந்து 11 மணி நேரம் திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை சாத்தப்பட உள்ளது.

வரும் 27-ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 11.54 மணி முதல், சனிக்கிழமை அதிகாலை 3.49 வரை சந்திர கிரகணம் நீடிக்கிறது. இதனையொட்டி, 27-ம் தேதி மாலை 5 மணி முதல் மறுநாள் காலை 4 மணி வரை திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை சாத்தப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மறுநாள் சனிக்கிழமை காலையில் கோயில் சுத்தப்படுத்தப்பட்டு, அதற்குண்டான பரிகார பூஜைகள் நடத்தப்பட்ட பின்னர், காலை 4.15 மணிக்கு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், சந்திர கிரகணத்தையொட்டி, வரும் 27-ம் தேதி திருப்பதியை அடுத்துள்ள புகழ்பெற்ற வாயுத்தலமான ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் மட்டும் நடை சாத்தப்பட மாட்டாது என்றும் அன்றைய தினம் கிரகண கால அபிஷேகம் நடைபெறும் என்றும் கோயில் நிர்வாத்தினர் தெரிவித்துள்ளனர். இக்கோயிலில் மூலவர் நவகிரக கவசம் அணிந்திருப்பதால், எந்த கிரகணத்தின்போதும் இக்கோயில் மூடப்படுவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

மேலும்