வக்பு திருத்த மசோதாவுக்கு ஆதரவாக குர்ஆன் வசனங்களை மேற்கோள் காட்டி மாநிலங்களவையில் பாஜக எம்.பி. பேச்சு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ​மாநிலங்​களவை​யில் வக்பு சட்ட திருத்த மசோதா மீது நடை​பெற்ற விவாதத்​தின் போது, குர்​ஆன் வசனங்​களை மேற்​கோள் காட்டி பாஜக எம்​.பி. ரா​தா மோகன்​ தாஸ் பேசி​னார்.

மாநிலங்​களவை​யில் வக்பு சட்ட திருத்த மசோதா நேற்​று​முன்​தினம் தாக்​கல் செய்​யப்​பட்​டது. அதன் மீது எம்​.பி.க்​கள் கார​சா​ர​மாக விவாதம் நடத்​தினர். பாஜக எம்​.பி. ராதா மோகன் தாஸ் அகர்​வால் பேசும் போது வக்பு சட்ட திருத்த மசோ​தாவுக்கு ஆதர​வாக, இஸ்​லாமியர்​களின் புனித நூல் குர்​ஆனில் இருந்து 4 வசனங்​களை மேற்​கோள் காட்டி பேச முன்​வந்​தார். இது அவை​யில் இருந்த அனை​வரை​யும் ஆச்​சரியப்​படுத்​தி​யது. ராதா மோகன் தாஸ் பேசி​ய​தாவது:
நாடாளு​மன்ற கூட்​டுக் குழு​வில் நான் உறுப்​பின​ராக இருக்​கிறேன். அவர்​களும் (எதிர்க்​கட்​சி​யினர்) உறுப்​பினர்​களாக உள்​ளனர். ஏதாவது முக்​கிய விஷ​யம் குறித்து ஆலோ​சனை நடத்​தும் போது, மதம் தொடர்​பான அறிஞர்​களை வரவழைத்​தால் அவர்​களிடம் நான் குர்​ஆனில் இருந்து மேற்​கோள் காட்டி பேசி​யிருக்​கிறேன். இதற்கு அவர்​கள்​தான் (எதிர்க்​கட்​சிகளின் உறுப்​பினர்​கள்) சாட்​சி.

அதே​போல், அனைத்து வித​மான நிதி பரிவர்த்​தனை​களுக்​கும் எழுத்​துப்​பூர்​வ​மான ஆவணங்​கள் கட்​டா​யம் இருக்க வேண்​டும் என்று குர்​ஆனில் தெளி​வாக கூறப்​பட்​டுள்​ளது. ஆனால், வக்பு சொத்​துகளுக்கு ஆவணங்​கள் இல்லை என்று கூறு​வது குர்​ஆனுக்கு முரணாக உள்​ளது. நான் குர்​ஆனை படித்து ஒரு கேள்வி கேட்​கிறேன். ஒரு சொத்து பகிரங்​க​மாக நன்​கொடை​யாக வழங்​காத நிலை​யில், அதைப் பயன்​படுத்​தும் பயனாளர் அந்த சொத்தை வக்பு என்று கருதலாம் என்று குரானில் எங்​காவது ஒரு வசனம் அல்​லது ஹதீஸில் குறிப்பு உள்​ளதா என்று காட்​டுங்​கள். இந்​தக் கேள்விக்கு ஒரு​வர் கூட பதில் சொல்ல முடி​யாது. நான் குரானைப் படிப்​ப​தால் என்னை மவுலானா என்​கின்​றனர். இந்​துக்​கள் அனை​வரும் குரானை முழு​மை​யாகப் படித்து தெரிந்து கொள்ள வேண்​டும். இவ்​வாறு பாஜக எம்​.பி. ரா​தா மோகன்​ தாஸ்​ பேசி​னார்​.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

மேலும்