புதுடெல்லி: விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என திரிணமூல் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்திய வம்சாவளியை சேர்ந்த நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ். கடந்த ஆண்டு ஜூலையில் சக விண்வெளி வீரர் புட்ச் வில்மோருடன் வெறும் 8 நாள் பயணமாக விண்ணில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றார். ஆனால் எதிர்பாராத வகையில் அவர் 9 மாதங்களுக்கு மேல் அங்கு தங்க நேரிட்டது. இதையடுத்து சுனிதா, வில்மோர் உள்ளிட்ட 4 விண்வெளி வீரர்கள் கடந்த மார்ச் 19-ம் தேதி பத்திரமாக பூமிக்கு திரும்பினர்.
இதுகுறித்து மாநிலங்களவையில் நேற்று பூஜ்ஜிய நேரத்தில் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. நதிமுல் ஹக் பேசுகையில், “சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஒன்பது மாதங்கள் கழித்த பிறகு மார்ச் மாதம் பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோரின் சாதனைகள் குறித்து நாடு பெருமிதம் கொள்கிறது. சுனிதா வில்லியம்ஸுக்கு பாரத ரத்னா விருது வழங்கி மத்திய அரசு கவுரவிக்க வேண்டும்" என்றார்.
மார்க்சிஸ்ட் உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் பேசுகையில், "எல் 2 எம்புரான்' மலையாள திரைப்படத்தின் சில பகுதிகளை நீக்க திரைப்பட தணிக்கை வாரியம் உத்தரவிட்டிருப்பது, கருத்து சுதந்திரத்தின் மீதான தாக்குதல்" என்றார். இதற்கு மத்திய அமைச்சர் ஜார்ஜ் குரியன் எதிர்பு தெரிவித்தார். அத்திரைப்படம் கிறிஸ்தவர்களின் நம்பிக்கைக்கு எதிராக உள்ளதாக அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
8 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago