எல்லை கட்டுப்பாடு கோட்டைத் தாண்டி பாகிஸ்தான் ராணுவம் ஊடுருவல்: இந்திய ராணுவம் பதிலடி

By செய்திப்பிரிவு

பூஞ்ச்: இந்தியா - பாகிஸ்தான் இடையேயான எல்லைக்கட்டுப்பாடு கோடு போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பாகிஸ்தான் ராணுவம் ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் ஊடுருவியதாக இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், “ஏப்ரல் 1ம் தேதி, பாகிஸ்தான் ராணுவம் எல்லைக்கட்டுப்பாடு கோட்டை மீறி இந்தியாவுக்குள் ஊடுருவியது. இதனால் கிருஷ்ணா காட் செக்டாரில் ஒரு கன்னி வெடி குண்டு வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்தது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது, போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியது. இதற்கு நமது ராணுவம் முறையாக பதிலடி கொடுத்தது. தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

எல்லைக் கட்டுப்பாடு கோட்டில் அமைதியை பேணுவதற்கு 2021-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட டிஜிஎஸ்எம்ஒ புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கடைபிடிக்க வேண்டும் என்று இந்தியா மீண்டும் வலியுறுத்துகிறது.” என்று தெரிவித்தார்.

கடந்த 2021ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் உயர் அதிகாரிகள் சந்தித்து பேசிய போது, வன்முறைக்கு வழிவகுக்கும் கவலைகளுக்கு தீர்வு காண இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்