மாநில சட்டம் ஒழுங்கு போலீஸ் துறைத் தலைவராக (டிஜிபி) தகுதியான, மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளைத்தான் மாநில அரசுகள் நியமனம் செய்ய வேண்டும், இடைக்கால டிஜிபி நியமனம், ஓய்வு பெறும் நாளில் நியமனம் என்று யாரையும் பதவியில் அமர்த்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
போலீஸ் துறையில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் தொடர்பாக பிரகாஷ் சிங் தொடர்ந்த பொதுநல வழக்கில் கடந்த 2006-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தது. இந்நிலையில், அந்தத் தீர்ப்பில் சில திருத்தங்களை மேற்கொள்ளக் கோரி மத்திய அரசு மனு செய்தது.
அந்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
வழக்கில், மத்திய அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் ஆஜராகி வாதாடினார். அதில் இன்னும் பல மாநிலங்களில் இடைக்கால டிஜிபிக்கள் நியமிக்கும் முறை தொடர்ந்து வருகிறது. இது கடந்த 2006-ம் ஆண்டு பிரகாஷ் சிங் தீர்ப்புக்கு எதிரானதாகும் எனத் தெரிவித்தார்.
மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் வாதிடுகையில், பல மாநிலங்கள் 2006-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு மாறாக, போலீஸ் டிஜிபிக்களை நியமித்து வருகின்றன. தகுதியான, மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளை யுபிஎஸ்சி குழுவுக்கு அனுப்பிவைத்தால், அவர்கள் 3 ஐபிஎஸ் அதிகாரிகளை பரிந்துரை செய்து அனுப்பிவைப்பார்கள். அவர்களில் ஒருவரை மாநில அரசுகள் தேர்வு செய்யலாம் என்கிற உச்ச நீதிமன்ற உத்தரவை மாநில அரசுகள் பின்பற்றவில்லை எனத் தெரிவித்தார்.
இதையடுத்து, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் கொண்ட அமர்வு பல்வேறு அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்தனர். அவை பின்வருமாறு.
* சட்டம் ஒழுங்கு போலீஸ் டிஜிபிக்களாக நியமிக்கப்படுபவர்கள் தகுதிவாய்ந்த, மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளாக இருக்க வேண்டும்.
* மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர்களை யுபிஎஸ்சி ஆணையத்துக்கு அனுப்பிவைத்து, அவர்கள் 3 பேரை பரிந்துரைப்பார்கள்.
* அந்த 3 அதிகாரிகளில் ஒருவரை மாநில அரசுகள் சட்டம் ஒழுங்கு டிஜிபிக்களாக நியமித்துக்கொள்ளலாம்.
* ஓய்வுபெறும் காலத்துக்கு குறுகிய நாட்களுக்கு முன் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமித்து, அவர்களுக்கு 2 ஆண்டுகள் பதவி நீட்டிப்பு வழங்குவதை மாநில அரசுகள் அறவே தவிர்த்துவிட வேண்டும்.
* சட்டம் ஒழுங்கு டிஜிபிக்களாக நியமிக்கப்படுபவர்கள், தங்களுடைய பதவிமுடியும் காலம்வரை 2 ஆண்டுகள் வரை பணியாற்றும் தகுதி உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
* தற்போது பதவியில் இருக்கும் சட்டம் ஒழுங்கு டிஜிபி ஓய்வு பெறும் காலத்துக்கு 3 மாதங்களுக்கு முன்பே புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியை நியமிக்கும் பணிகளை அரசு தொடங்கிவிட வேண்டும்.
* தகுதிவாய்ந்த, அனுபவம் நிறைந்த, மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் பட்டியலை யுபிஎஸ்சி குழுவுக்கு மாநில அரசு அனுப்பிவைக்க வேண்டும்.
* அதிலிருந்து 3 பேர் பட்டியலை யுபிஎஸ்சி அனுப்பும் அதிலிருந்து ஒருவரை மாநில அரசு நியமிக்கலாம்.
* கடந்த 2006-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக மாநில அரசுகள் ஏதேனும் சட்டம், உத்தரவுகள் பிறப்பித்திருந்தால் அது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
8 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago