பெங்களூரு: கட்சித் தலைவர்களை விமர்சித்ததன் காரணமாக கர்நாடக பாஜக எம்எல்ஏவும் முன்னாள் மத்திய அமைச்சருமான பசனகவுடா பாட்டீல் யத்னால் அக்கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் பீஜாப்பூர் நகர தொகுதியின் எம்எல்ஏவாக இருப்பவர் பசனகவுடா பாட்டீல் யத்னால். கடந்த 2023-ம் ஆண்டு முதல் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான எடியூரப்பாவையும், அவரது மகனும் மாநிலத் தலைவருமான விஜயேந்திராவையும் கடுமையாக விமர்சித்து வந்தார் யத்னால்.
கட்சித் தலைவர்களை விமர்சிக்க வேண்டாம் என்று பாஜக மேலிடம் வலியுறுத்தியபோதும் அவர் தொடர்ந்து, தலைவர்களை விமர்சித்து வந்தார். இந்நிலையில் பசன கவுடா பாட்டீலை கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியில் இருந்து 6 ஆண்டுகள் இடைநீக்கம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது என்று பாஜகவின் மத்திய ஒழுங்குமுறைக் குழு செயலாளர் ஓம் பதக் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago