பருவமழை தீவிரமடைந்துள்ளதால் நாட்டின் பல பகுதிகளில் இந்த வாரம் பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என இந்திய வானிலை ஆய்வு அமையம் கூறியுள்ளது.
நாடுமுழுவதும் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு போதுமான அளவு பெய்து வருகிறது. கடந்த சில தினங்களாவே, தமிழகம், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் கூறுகையில் ‘‘ ஹரியாணா, சண்டிகர், சட்டீஸ்கர், ஜார்கண்ட், ஒடிசா, நாகலாந்து, மணிப்பூர், திரிபுரா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இந்த வாரம் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேற்குவங்கம், உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இமயமலை பகுதி மாநிலங்களான பீகார், அருணாச்சல பிரதேசம், அசாம் போன்ற மாநிலங்களில் மிக கடுமையான மழை பெய்யவும் வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அரசு துறைகள் மழைகால பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’’ என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago