கர்ப்பிணிகளுக்கான நிதி ஒதுக்கீடு குறைப்பு: மாநிலங்களவையில் சோனியா கேள்வி

By செய்திப்பிரிவு

மத்திய அரசின் கர்ப்பிணிகள் நிதியுதவி திட்டத்துகாகன நிதி ஒதுக்கீட்டை குறைத்தது ஏன் என மாநிலங்களவையில் சோனியா காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் பூஜ்ஜிய நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி நேற்று பேசியதாவது:

கடந்த 2013-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சியின்போது உணவு பாதுகாப்பு சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இது, கரோனா பெருந்தொற்றின்போது ஏழைகளுக்கு இலவசமாக உணவுப் பொருட்களை வழங்க வகை செய்யும் பிரதமரின் கரிப் கல்யாண் திட்டத்துக்கு அடித்தளமாக அமைந்தது. இதன்படி இப்போது 81 கோடி பேர் பயன்பெறுகின்றனர்.

உணவு பாதுகாப்பு சட்டத்தின் படி, பிரதமரின் மாத்ரு வந்தனா திட்டத்தின் கீழ் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்தான உணவு கிடைப்பதை உறுதி செய்வதற்காக ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் 2 தவணைகளாக வழங்கப்படுகிறது. இதற்காக ரூ.12 ஆயிரம் கோடி தேவைப்படுகிறது. ஆனால், வரும் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் ரூ.2,500 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு கடந்த 2022-23 நிதியாண்டு முதலே குறைக்கப்பட்டு வருகிறது. இது உணவு பாதுகாப்பு சட்டத்தை மீறும் செயல். இதுகுறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

46 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

23 hours ago

மேலும்