எம்எல்ஏக்கள் ஹனி டிராப் செய்யப்படுவதாக கர்நாடக அமைச்சர் புகார்: பொதுநல மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்ச நீதிமன்றம் 

By இரா.வினோத்


பெங்களூரு/புதுடெல்லி: கர்நாடகாவில் எம்எல்ஏக்களை குறி வைத்து ஹனி டிராப் செய்யப்படுவதாக அமைச்சர் ராஜண்ணா புகார் தெரிவித்தது தொடர்பான மனுவை உச்ச நீதி மன்றம் விசாரணைக்கு ஏற்றுள் ளது. இதனால் அம்மாநில அரசி யலில் பரபரப்புஏற்பட்டுள்ளது.

கர்நாடக சட்டப்பேரவையில் கடந்த 21-ம் தேதி கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.என். ராஜண்ணா பேசும்போது, “சில எம்எல்ஏ-க்கள் தங்களது அரசி யல் எதிரிகளை பழி வாங்கு வதற்காக பெண்களை வைத்து பாலியல் வழக்கில் சிக்க வைக்க முயற்சிக்கின்றனர்.

என்னையும் ஹனி டிராப்பில் சிக்க வைக்க சதி செய்தனர். என்னைப் போல 48 எம்எல்ஏ-க் களை குறிவைத்து ஹனி டிராப் சதி முயற்சி மேற்கொள்ளப்பட் டுள்ளது.
இதுதவிர நீதிபதிகள், காவல் துறை உயர் அதிகாரிகள், ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட் டோரையும் குறிவைத்து இந்த சதி நடந்துள்ளது. எனவே அரசி யல் தலைவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். இதுகுறித்து நீதி விசாரணை நடத்த வேண் டும்" என புகார் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தை விசாரிக்க வலியுறுத்தி அமளியில் ஈடுபட்ட பாஜக எம்எல்ஏ-க்கள் அஸ்வத் நாராயண், முனி ரத்னா, தீரஜ் முனிராஜ், சந்துரு லமானி உள் ளிட்ட 18 பேர் அடுத்த 6 மாதங் களுக்கு இடைநீக்கம் செய்யப் பட்டனர். இதனை கண்டித்து பாஜகவும், மஜதவும் போராட் டத்தை அறிவித்துள்ளன.

இந்நிலையில், பினய் குமார் சிங் என்பவர் உச்ச நீதிமன்றத் தில் இதுதொடர்பாக பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள் ளார். அதில், "மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட எம்எல்ஏ-க்கள் ஹனி டிராப் செய்யப்படுவதாக கர்நாடக சட்டப்பேரவையில் தெரி வித்துள்ளனர். தங்களுக்கு பாது காப்பு வழங்க வேண்டும் என அரசை கோரியுள்ளனர்.

இந்த விவகாரத்தால் ஆட்சிக் கும் பாதிப்பு ஏற்படும் என கூறி யுள்ளனர். எனவே ஹனி டிராப் பின் தீவிரத்தை உணர்ந்து, உச்ச நீதிமன்றம் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும்" என கோரினார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமர்வு முன்னிலையில் நேற்று மனுதா ரர் பினய் குமார் சிங் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பருண் குமார் சிங் கூறுகையில், “இந்த விவாகரத்தால் கர்நாடகாவில் 18 எம்எல்ஏக்கள் 6 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள் ளனர். இந்த விவகாரத்தின் தீவிரத்தை உணர்ந்து, இந்த மனுவை அவசர வழக்காக கருதி விசாரிக்க வேண்டும்" என வலி யுறுத்தினார். அதற்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, "இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத் துக்கொள்ளப்படும்" என தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்