மதுரா பாங்கே பிஹாரி கோயில் கிருஷ்ணருக்கு முஸ்லிம்கள் தயாரிக்கும் உடைக்கு தடை விதிக்க நிர்வாகம் மறுப்பு

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: உத்தர பிரதேசத்​தின் கிருஷ்ணர் பிறந்த இடமாக கருதப்​படும் இடம் மது​ரா. இங்கு புகழ்​பெற்ற கிருஷ்ண ஜென்ம பூமி கோயில் உள்​ளது. இதையொட்​டிய நகர​மாக பிருந்​தாவனத்​தில் பழமை​வாய்ந்த பாங்கே பிஹாரி கோயில் உள்​ளது. இங்கு கிருஷ்ணருக்கு அணிவிக்​கும் உடைகளை பல ஆண்​டு​களாக முஸ்​லிம்​கள் தயாரிக்​கின்​றனர்.

இதற்கு தடை விதிக்க வேண்​டும் என்று இந்​துத்​துவா அமைப்​பினர் வலி​யுறுத்தி வரு​கின்​றனர். இதுகுறித்து கோயில் நிர்​வாகத்​துக்கு ஸ்ரீ கிருஷ்ண ஜென்ம பூமி முக்தி சங்​கர்ஷ் நியாஸின் தலை​வர் தினேஷ் சர்மா எழு​தி​ய​கடிதத்​தில், ‘‘முஸ்​லிம் கைவினைஞர்​களின் சேவை​களை இந்து கடவுள்​களுக்கு பயன்​படுத்​து​வதை தவிர்க்க வேண்​டும். நம் மதத்​துக்​கான தூய்​மையை கவனிப்​பவர்​களால் மட்​டுமே கிருஷ்ணரின் உடைகள் சுத்​த​மாகத் தயாரிக்​கப்​படு​வதை உறுதி செய்ய முடி​யும்’’ என்று கூறி​யுள்​ளார்.

இது​போல், மேலும் சில இந்​துத்​துவா அமைப்​பு​களும் கடிதம் எழுதி உள்​ளன. அதில், ‘‘முஸ்​லிம்​கள் இறைச்சி சாப்​பிடு​பவர்​கள். இவர்​கள் இந்து மரபு​களை மதிக்​காததுடன் பசு பாது​காப்​பை​யும் கடைபிடிக்​காதவர்​கள். இது​போன்​றவர்​கள் நம் இந்து தெய்​வங்​களின் உடைகளை தயாரிக்க கூடாது’’ என்று தெரி​வித்​துள்​ளனர்.
அத்​துடன் கோரிக்​கையை நிறைவேற்​றா​விட்​டால், போராட்​டங்​கள் நடத்​து​வோம் என்​றும் அவர்​கள் எச்​சரித்​துள்​ளனர். இதற்கு கோயில் தலைமை சேவகர் ஞானேந்​திர கிஷோர் கோஸ்​வாமி அனுப்​பிய பதில் கடிதங்​களில் கூறி​யிருப்​ப​தாவது: கிருஷ்ணருக்கு முஸ்​லிம்​கள் உடை தயாரிப்​ப​தற்கு தடை விதிக்க முடி​யாது. மத வழி​பாடு​களில் நாங்​கள் எந்த குறிப்​பிட்ட சமூகம் மீதும் பாகு​பாடு காட்ட மாட்​டோம். மதத்​தின் அடிப்​படை​யில் கைவினைஞர்​களை மதிப்​பிட முடி​யாது. ஏனெனில், நல்​லொழுக்​கம் உள்​ளவர்​களும், பாவம் கொண்​ட​வர்​களும் ஒரே குடும்​பத்​தில் பிறந்​த​தாக வேதங்​களில் குறிப்​பு​கள் உள்​ளன.

கம்​சன் போன்ற ஒரு பாவி, கிருஷ்ணரின் தாய்​வழி தாத்தா உக்​ரசேனரின் குடும்​பத்​தில் பிறந்​தார். பிரகலாதனின் வடிவத்​தில் ஒரு நாராயண பக்​தர் ஹிரண்ய கஷ்யபு போன்ற ஹரி​யின் எதிரி​யின் வீட்​டில் பிறந்​தார். எனவே, நல்​ல​வர்​களும் கெட்​ட​வர்​களும் எந்த மதத்​தி​லும், பிரி​விலும் அல்​லது குடும்​பத்​தி​லும் காணப்​படலாம்.

மதுரா - பிருந்​தாவனத்​தில் ஏராள​மான முஸ்​லிம் கைவினைஞர்​கள் தாக்​கூர்​ஜி​யின் (கிருஷ்ணர்) கிரீடம் மற்​றும் ஆடைகளை உரு​வாக்​கு​கின்​றனர். இதே​போல, காசி​யில் முஸ்​லிம் குடும்​பங்​கள் சிவபெரு​மானுக்கு ருத்​ராட்ச மாலைகளை உரு​வாக்​கு​கின்​றன. இந்து கடவுள்​களின் உடை, கிரீடம் மற்​றும் அவற்​றில் ஜரி வேலைப்​பாடு​களைச் செய்​யும் திறமை​யான கைவினைஞர்​களில் சுமார் 80 சதவீதம் பேர் முஸ்​லிம்​கள். முகலாயப் பேரரசர் அக்​பர் ஒரு காலத்​தில் கோயிலுடன் தொடர்​புடைய மரி​யாதைக்​குரிய துற​வி​யான சுவாமி ஹரி​தாஸுக்​கு, கிருஷ்ணரை வழிபடு​வதற்​காக வாசனை திர​வி​யத்தை பரிசளித்​தார். இவ்​வாறு அவர் கடிதத்​தில் தெரி​வித்​துள்​ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

மேலும்