உ.பி.யில் கடந்த 2017 முதல் நில மாபியா கும்பல்களிடம் இருந்து 64 ஆயிரம் ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார்.
இது தொடர்பாக அரசு விழா ஒன்றில் அவர் நேற்று பேசியதாவது: உ.பி.யில் 2017-ம் ஆண்டுக்கு முன் நில உரிமை மாற்றம், எல்லை நிர்ணயம், பயன்பாட்டு உரிமைகள் உள்ளிவை தொடர்பாக 33 லட்சத்துக்கும் மேற்பட்ட தீர்க்கப்படாத தகராறுகள் இருந்தன. நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு வழக்குகளை தீர்ப்பதற்கு சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட் முதல் தாசில்தார் மற்றும் வருவாய் அதிகாரிகள் வரை அனைத்து நிர்வாக மட்டத்திலும் கடுமையான காலக்கெடுவை நிர்ணயித்து, பொறுப்புணர்வை உறுதி செய்தோம். இதன் மூலம் அனைத்து நிலுவை வழக்குகளுக்கும் தீர்வு கண்டோம்.
நில மாஃபியாவுக்கு எதிரான பணிக்குழு மூலம் நில மாஃபியாவை அரசு ஒடுக்கியதன் விளைவாக சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட 64 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
உ.பி.யில் சட்டம் ஒழுங்கு மேம்பட்டுள்ளது. இதனால் முதலீட்டுட்டுக்கான முக்கிய இடமாக உ.பி. மாறியுள்ளது.
» மணிப்பூர் மாநிலம் சூரசந்த்பூர் மாவட்டத்தில் தொடர்ந்து பதற்றம்
» தமிழ்நாடு, ராஜஸ்தான், கேரளா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் எஸ்டிபிஐ நிர்வாகிகள் வீடுகளில் சோதனை
இணையத் தொடர்பு மூலம் கிராம அளவிலான நிர்வாகம் வலுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கிராம மக்கள் தொலைதூரப் பகுதிகளுக்கு செல்லாமல் முக்கிய ஆவணங்களை பெறலாம். மக்கள் குறித்த நேரத்தில் சேவை பெறுவதை இது உறுதி செய்துள்ளது. இவ்வாறு யோகி ஆதித்யநாத் கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 min ago
இந்தியா
6 mins ago
இந்தியா
21 mins ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago