புதுடெல்லி: சத்தீஸ்கரில் நடைபெற்ற இருவேறு மோதல்களில் 22 நக்ஸலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், இந்த நடவடிக்கைக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இன்று நமது வீரர்கள் ‘நக்சலைட்டுகள் இல்லாத இந்தியா’ என்ற திசையில் மற்றொரு பெரிய வெற்றியைப் பெற்றுள்ளனர். சத்தீஸ்கரில் உள்ள பிஜாப்பூர் மற்றும் கான்கரில் நமது பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட இரண்டு தனித்தனி நடவடிக்கைகளில் 22 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்.
மோடி அரசாங்கம் நக்சலைட்டுகளுக்கு எதிராக இரக்கமற்ற அணுகுமுறையுடன் முன்னேறி வருகிறது. சரணடைதல் முதல் வாழ்வாதாரம் வரை அனைத்து வாய்ப்புகளும் இருந்தபோதிலும் சரணடையாத நக்சலைட்டுகளுக்கு எதிராக பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையை அரசு பின்பற்றுகிறது. அடுத்த ஆண்டு மார்ச் 31-க்குள் நாடு நக்சலைட்டுகள் இல்லாத நாடாக மாறப்போகிறது.” என்று தெரிவித்துள்ளார்.
கங்கலூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த மோதலில் 18 நக்ஸலைட்டுகள் கொல்லப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சத்தீஸ்கர் துணை முதல்வர் விஜய் சர்மா, “இதுவரை 18 நக்சலைட்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. எங்கள் வீரர்களில் ஒருவரான ராஜுவும் இதில் வீரமரணம் அடைந்தார். இது எங்கள் வீரர்களால் அடையப்பட்ட ஒரு பெரிய வெற்றி.” என்று குறிப்பிட்டார்.
» நாக்பூர் வன்முறை: குற்றவாளிகளை பிடிக்க 18 சிறப்பு குழுக்கள் அமைப்பு - காவல்துறை தகவல்
» சத்தீஸ்கரில் 22 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை - ஒரு காவலர் உயிரிழப்பு
இது தொடர்பாக பேசிய சத்தீஸ்கர் சட்டமன்ற சபாநாயகர் ரமன் சிங், “நமது காவல்துறையினர் வெற்றி பெற்று வருகின்றனர். 2026 ஆம் ஆண்டுக்குள் மாநிலத்தை நக்சலைட்டுகளிலிருந்து முற்றிலுமாக விடுவிக்கும் முயற்சியில் நமது முதல்வர் விஷ்ணு தியோ சாய் மற்றும் துணை முதல்வர் விஜய் சர்மா ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். காவல்துறையினரின் மன உறுதி அதிகமாக உள்ளது" என கூறினார்.
இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக ராய்ப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய், "இரண்டு தனித்தனி நடவடிக்கைகளுக்குப் பிறகு, கான்கர் மற்றும் பிஜாப்பூரில் 22 நக்சலைட்டுகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நமது பாதுகாப்புப் படைகளின் முயற்சிகளை நாங்கள் பாராட்டுகிறோம். மார்ச் 31, 2026க்குள் நக்சலிசத்தை முடிவுக்குக் கொண்டுவருவது மத்திய உள்துறை அமைச்சரின் உறுதிப்பாடாகும். அவரது தீர்மானம் நிறைவேறும் என்று நாங்கள் நம்புகிறோம். இது இரட்டை எஞ்சின் அரசாங்கத்தின் நன்மை.” என தெரிவித்தார்.
22 நக்ஸலைட்டுகள் சுட்டுக்கொலை: முன்னதாக இன்று காலை சத்தீஸ்கரின் பிஜாப்பூர் மற்றும் கான்கெர் மாவட்டங்களில் பாதுகாப்புப் படையினருக்கும் நக்ஸலைட்டுகளுக்கும் இடையே நடந்த இருவேறு மோதல்களில் 22 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பிஜாப்பூர் மற்றும் தண்டேவாடா மாவட்டங்களின் எல்லையில் உள்ள ஒரு காட்டில் இன்று காலை 7 மணியளவில் கங்கலூர் காவல் நிலையப் பகுதியில் நக்ஸலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினரின் கூட்டுக் குழு ஈடுபட்டது. அப்போது, அவர்கள் மீது நக்ஸலைட்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதை அடுத்து, பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுத்தனர்.
இந்த மோதலில், பாதுகாப்புப் படையினர் 18 நக்சலைட்டுகளைக் கொன்றதாகவும், மேலும் உடல்களுடன் துப்பாக்கிகள், வெடிமருந்துகள் ஆகியவை மீட்கப்பட்டதாகவும் மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த துப்பாக்கிச் சண்டையில் மாநில காவல்துறையின் மாவட்ட ரிசர்வ் காவல்படை (டிஆர்ஜி) பிரிவைச் சேர்ந்த ஒரு காவலர் கொல்லப்பட்டதாகவும் அவர் கூறினார்.
சத்தீஸ்கரின் கான்கெர் - நாராயண்பூர் மாவட்ட எல்லைப் பகுதியில் நடைபெற்ற மற்றொரு மோதலில் 4 நக்ஸலைட்டுகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர். கொரோஸ்கோடோ என்ற கிராமத்துக்கு அருகில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதன்மூலம், பாதுகாப்புப் படையினருக்கும் நக்ஸலைட்டுகளுக்கும் இடையே நடந்த மோதலில் இன்று 22 நக்ஸலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
28 mins ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago