புதுடெல்லி: “இந்தியாவில் உங்களைப் பார்க்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்” என்று விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதியுள்ளார்.
பிரதமரின் கடித நகலை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங், "சில நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி ஒரு நிகழ்வில் விண்வெளி வீரர் மாசிமினோவை சந்தித்தார். அப்போது, தன்னுடையதும், இந்திய மக்களுடையதுமான இந்தக் கடிதம் சுனிதா வில்லியம்ஸை சென்றடைய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அவரது பாதுகாப்பான வருகைக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர், இந்தியாவின் புகழ்பெற்ற மகளுடனான ஆழமான பிணைப்பை மீண்டும் உறுதிப்படுத்தினார். இதனால் நெகிழ்ந்துபோன சுனிதா, பிரதமர் மோடிக்கும் இந்தியாவுக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்" என குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தனது கடிதத்தில், "இந்திய மக்களின் வாழ்த்துகளை நான் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று ஒரு நிகழ்ச்சியில், பிரபல விண்வெளி வீரர் மைக் மாசிமினோவைச் சந்தித்தேன். எங்கள் உரையாடலின்போது, உங்கள் பெயர் வந்தது. உங்களைப் பற்றியும் உங்கள் பணியைப் பற்றியும் நாங்கள் எவ்வளவு பெருமைப்படுகிறோம் என்பதைப் பற்றி விவாதித்தோம். இந்த உரையாடலைத் தொடர்ந்து, உங்களுக்கு என்னால் கடிதம் எழுதாமல் இருக்க முடியவில்லை.
நான் அமெரிக்காவுக்கு வருகை தந்தபோது அதிபரிடம் உங்கள் நலம் குறித்து விசாரித்தேன். 140 கோடி இந்தியர்கள் எப்போதும் உங்கள் சாதனைகளில் பெருமிதம் கொண்டுள்ளனர். சமீபத்திய முன்னேற்றங்கள் உங்கள் ஊக்கமளிக்கும் மன உறுதியையும் விடாமுயற்சியையும் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளன. நீங்கள் ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் இருந்தாலும், நீங்கள் தொடர்ந்து எங்கள் இதயங்களுக்கு நெருக்கமாக இருக்கிறீர்கள். இந்திய மக்கள் உங்கள் நல்ல ஆரோக்கியத்திற்காகவும் உங்கள் பணி வெற்றிக்காகவும் பிரார்த்தனை செய்கிறார்கள்.
» புதிய வந்தே பாரத், நமோ பாரத், அம்ரித் பாரத் ரயில்கள் தயாரிக்கப்படும்: அஸ்வினி வைஷ்ணவ்
» ரயில்வே துறையிலும் பாஜக அரசு பாரபட்சம் காட்டுகிறது: மக்களவையில் நவாஸ்கனி எம்.பி புகார்
போனி பாண்டியா (சுனிதாவின் தாய்) உங்கள் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். மேலும் மறைந்த தீபக் பாண்டியாவின் (சுனிதாவின் தந்தை) ஆசிர்வாதங்களும் உங்களுடன் இருக்கும் என்று நான் நம்புகிறேன். 2016-ஆம் ஆண்டு நான் அமெரிக்கா சென்றிருந்தபோது, உங்களுடன் அவரைச் சந்தித்ததை நான் மிகவும் நினைவில் கொள்கிறேன்.
நீங்கள் திரும்பிய பிறகு, இந்தியாவில் உங்களைப் பார்ப்பதற்கு நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம். இந்தியா தனது மிகவும் புகழ்பெற்ற மகள்களில் ஒருவரை வரவேற்பது மகிழ்ச்சியாக இருக்கும். மைக்கேல் வில்லியம்ஸுக்கு (சுனிதாவின் கணவர்) எனது அன்பான வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்களும், பாரி வில்மோர் பாதுகாப்பாக திரும்ப வாழ்த்துகள்" என குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
39 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
47 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago