ஊருக்குள் வெள்ளம் புகுந்து, ஆம்புலன்ஸ் வர தாமதமானதால், வெள்ளத்தினூடே கர்ப்பிணி பெண்ணை அவரது குடும்பத்தினரே மருத்துவமனைக்கு கட்டிலில் கொண்டு சென்ற சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் நடந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் திகம்கரில், ஆம்புலன்ஸ் சேவையின் ஹெல்ப்லைன் எண் 108 க்கு தொலைபேசி செய்து உடனடியாக ஒரு ஆம்புலன்ஸ் அனுப்ப மருத்துவமனை அதிகாரிகளிடம் கோரினர். ஆம்புலன்ஸ் வர தாமதமாகிக்கொண்டே இருந்ததால், நேரம் ஆக ஆக பிரசவ வலி கூடிக்கொண்டே இருந்தது.
பிரசவ வலி அதிகமான நிலையில் கர்ப்பிணி பெண்ணை கட்டிலில் படுக்கவைத்து குடும்ப உறுப்பினர்களே அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். எனினும், கடுமையான வெள்ளம் மற்றும் நீரில் மூழ்கியதால் ஆம்புலன்ஸ் வாகனம் அவர்களது கிராமத்தை சென்றடைய முடியவில்லை.
இதுகுறித்து பிரித்விப்பூர் மாவட்ட மருத்துவமனையின் டாக்டர் ரவி ராவத் கூறுகையில், ''நான் இந்த சம்பவம் குறித்து அறிந்திருக்கவில்லை. எனினும் தொடர்புடைய அதிகாரிகளுடன் பேசிய பிறகு என்னால் எதையும் சொல்லமுடியும்'' என்றார்.
உடற்கூறு சோதனை சம்பவம்
உடனடி மருத்துவ வசதிகள் இல்லாதிருப்பதால் ஏற்படும் இதேபோன்ற சம்பவங்கள் நிறைய சமீப காலத்தில் நடந்துள்ளன.
இரண்டு வாரங்களுக்கு முன்னர், அதே மாவட்டத்தில் உள்ள ஒரு நபர் தனது தாயின் உடலை உடற்கூறு பரிசோதனைக்காக மோட்டார் சைக்கிளில் எடுத்துச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
குன்வர் பாய் என அடையாளம் காணப்பட்ட அந்த பெண், பாம்பு கடித்ததால் இறந்தார். அவரது குடும்பத்தினர் பின்னர் மோகங்கரில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் தகவல் தெரிவித்ததற்குப் பிறகு உடல்கூறு பரிசோதனை (post mordem) நடத்தப்பட்டது. இருப்பினும் இறந்த இப்பெண்ணை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல ஒரு வேன் அனுப்பிவைக்கும்படி கேட்டும் அவர்கள் அனுப்ப மறுத்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர், இறந்த குன்வார் பாய்வின் மகனும் அவரது உறவினர்களும் அவரது உடலை ஒரு மோட்டார் சைக்கிளில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இதன் வீடியோ பதிவு கூட சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது.
முக்கிய செய்திகள்
இந்தியா
13 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
22 hours ago