டெல்லி முதல்வராக பதவியேற்றார் ரேகா குப்தா

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லியின் புதிய முதல்வராக ரேகா குப்தா இன்று (வியாழக்கிழமை) பதவியேற்றுக் கொண்டார். டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடந்த பிரம்மாண்ட விழாவில் பிரதமர் மோடி முன்னிலையில் பதவி ஏற்றுக்கொண்டார். துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

ரேகா குப்தாவின் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய அமைச்சரும் பாஜக தலைவருமான ஜெ.பி. நட்டா, ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி, ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

டெல்லியில் 27 ஆண்டுகளுக்குப் பின்பு பாஜக 3-ல் 2 பங்கு பெரும்பான்மை பெற்று 48 எம்எல்ஏ.க்களுடன் ஆட்சியை அமைத்துள்ளது. அதன்படி, டெல்லியின் புதிய முதல்வராக ரேகா குப்தா இன்று பதவியேற்றுக் கொண்டார். இதற்கு முன்னாள் பாஜகவின் சுஷ்மா ஸ்வராஜ், காங்கிரஸின் ஷீலா தீட்சித், ஆம் ஆத்மியின் அதிஷி சிங் ஆகியோர் டெல்லியின் பெண் முதல்வர்களாக இருந்துள்ளனர். அந்த வரிசையில் ரேகா குப்தா டெல்லியின் 4-வது பெண் முதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வாசிக்க>> யார் இந்த ரேகா குப்தா? - மாணவர் சங்கத் தலைவர் முதல் டெல்லியின் 4-வது பெண் முதல்வர் வரை!

6 கேபினட் அமைச்சர்கள் பதவியேற்பு: முதல்வர் ரேகாவுடன், பாஜக எம்எல்ஏக்களான பர்வேஷ் வர்மா, மஞ்சிந்தர் சிங் சிர்சா, கபில் மிஸ்ரா, ஆஷிஷ் சூட், பங்கஜ் குமார் சிங் மற்றும் ரவிந்தர் இந்த்ராஜ் சிங் ஆகியோர் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.

பர்வேஷ் சாகிப் சிங் வர்மா: டெல்லி அரசியலில் முக்கியமான ஜாட் சமூக பிரதிநிதியாக பர்வேஷ் வர்மா அறியப்படுகிறார். சமீபத்திய டெல்லி பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவாலை 4,089 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்திய பின்பு, மிகவும் முக்கியமான நபராக மாறினார். முதல்வர் பதவிக்கான போட்டியில் அவரின் பெயர் பரிசீலிக்கப்பட்டது. கடந்த 2014 - 2024 வரை பர்வேஷ் மேற்கு டெல்லியின் மக்களவை உறுப்பினராக இருந்தார். தற்போது பேரவைத் தேர்தலில் வென்று டெல்லி கேபினட் அமைச்சராகியுள்ளார்.

கபில் மிஸ்ரா: டெல்லி பேரவைத் தேர்தலில் கரவால் நகர் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் மனோஜ் குமார் தியாகியை 23,355 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று எம்எல்ஏவாக தேர்வாகியுள்ளார் கபில் மிஸ்ரா. கடந்த 2015 தேர்தலில் இதே தொகுதியில் மிஸ்ரா ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். அரவிந்த் கேஜ்ரிவால் அமைச்சரவையில் டெல்லி அரசின் நீர்வளத்துறை அமைச்சராக கபில் மிஸ்ரா இருந்தார். தனது சக அமைச்சரான சத்யேந்தர் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறியதால் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

மஞ்சிந்தர் சிங் சிர்சா: பாஜகவின் மஞ்சிந்தர் சிங் சிர்சா டெல்லி பேரவைத் தேர்தலில் ராஜவுரி கார்டன் தொகுதியில் வெற்றி பெற்று தனது மறுவருகையை பதிவு செய்துள்ளார். அவர் ஆம் ஆத்மி கட்சியின் தன்வதி சந்தேலாவை சுமார் 18,000-க்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார். கடந்த 2020 தேர்தலில் அவர் இதே தொகுதியை சந்தேலாவிடம் இழந்திருந்தார் என்பது குறிப்பிடத்து.

ஆஷிஷ் சூட்: டெல்லி முதல்வர் பதவிக்காக பரிந்துரைக்கப்பட்டவர்களில் ஆஷிஷ் சூடும் ஒருவர். டெல்லி அரசியலில் மிகவும் பிரபலமான ஆஷிஷ், இந்தப் பேரவைத் தேர்தலில் ஜானக்பூரி தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் பர்வீன் குமாரை 18,766 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுறச் செய்திருந்தார். இவர் பாஜகவின் ஜம்மு காஷ்மீரின் இணை பொறுப்பாளராவார்.

பங்கஜ் குமார் சிங்: முன்னாள் டெல்லி மாநகராட்சி (எம்சிடி) ராஜா மோகன் சிங்-ன் மகனான பங்கஜ் குமார் சிங் வார்டு கவுன்சிலராக இருந்துள்ளார். அடிப்படையில் பல் மருத்துவரான இவர் டெல்லி மாநகராட்சியில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். முதல் முறை எம்எல்ஏவான பங்கஜ் குமார் சிங், விகாஸ்புரி தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் மஹிந்தர் யாதவை 13,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்.

ரவிந்தர் இந்த்ராஜ் சிங்: டெல்லி பாஜகவில் தலித் சமூகத்தைச் சேர்ந்த ரவிந்தர் இந்த்ராஜ் சிங் பாவ்னா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அவர் ஆம் ஆத்மி வேட்பாளர் ஜெய் பகவான் உப்கரை 31,000 வாக்குகளில் வென்றிருந்தார். பாஜகவின் பட்டியலின மோர்சாவின் உறுப்பினரான ரவிந்தர் நீண்ட காலமாக பட்டியல் சமூகத்துக்காக பணியாற்றி வருகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்