ஓட்டுநரை நடுரோட்டில் இழுத்துப்போட்டு அடித்த பாஜக எம்எல்ஏ மகன்: வைரலான வீடியோ

By பிடிஐ

ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக எம்எல்ஏ தான்சிங் ராவத் மகன் போக்குவரத்து நெரிசல் மிக்க சாலையில் கார் ஓட்டுநர் ஒருவரை இழுத்துப்போட்டு அடித்துநொறுக்கிய காட்சி வீடியோவாகி வைரலாகியுள்ளது.

சுமார் ஒரு மாதத்திற்கு முன் நடந்த சம்பவம் இப்போதுதான் வைரலாகி உள்ளது. இந்த வீடியோவில். ராவத் மகன் ராஜ்வீர் வெறியோடு வாகனத்தின் ஓட்டுனரை வெளியே இழுப்பதை பார்க்கமுடிகிறது. அந்த சாலை போக்குவரத்து நெரிசலாக இருக்கிறது. அவரும் அவரது உதவியாளர்களும் தங்கள் காருக்கு வழிவிட்டு செல்லாமல் காரை ஓட்டிச்சென்றதாகக் கூறி அந்த காரின் ஓட்டுநரை நைய புடைக்கிறார்கள்.

இக்காட்சி வீடியோவில் பதிவாகி சமூக வலைத்தளங்களில் வைரலான பிறகு இப்பிரச்சனைக்கு நீதி கிடைக்குமான என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இருப்பினும், எம்எல்ஏ இப்பிரச்சனையை, குழந்தைகள் சம்பந்தப்பட்டது அதெல்லாம் அவர்களாகவே தீர்த்துக்கொள்வார்கள் 'இது ஒரு சிறிய பிரச்சினை' என்று கூறி மூடி மறைக்க முயற்சித்து வருவதாக தெரிகிறது.

பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, முதல்வர் வசுந்தரா ராஜே மற்றும் உள்துறை அமைச்சர் குலாப் சந்த் கட்டாரியா இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்படும் என்று நிருபர்களிடம் உறுதியளித்தனர்.

இதுகுறித்து கட்டாரியா தெரிவிக்கையில், இந்த பிரச்சினை குறித்து விசாரணை செய்யப்படும் என்றும், நீதி வழங்குவதில் விஐபி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

8 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்