கோழிக்கோடு: கேரளா கோயில் திருவிழாவின் போது யானைகள் மிரண்டு ஓடியதில் 3 பக்தர்கள் உயிரிழந் தனர். 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
கேரள மாநிலம் கோழிக்கோடில் மனக்குலங்கரா விஷ்ணு கோயில் உள்ளது. இங்கு நேற்றுமுன்தினம் திருவிழா நடைபெற்றது. அதற்காக யானைகள் ஊர்வலம் நடத்தவும் அரசு அனுமதி பெற்றதாகக் கூறப்படுகிறது. அதற்காக 2 யானைகள் அலங்கரிக்கப்பட்டு அழைத்து வரப்பட்டன. அன்று மாலை 6 மணிக்கு திருவிழா கோலாகலமாக தொடங்கியது. அப்போது பட்டாசுகள் வெடித்து மேள, தாளங்கள் இசைக்கப்பட்டன.
அந்த சத்தத்தை கேட்ட யானைகள் மிரண்டு அங்கும் இங்கும் ஓடின. முதலில் 2 யானைகளும் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டன. பின்னர் அருகில் இருந்த கட்டிடத்தின் சுற்றுச்சுவரை மோதி அங்கும் இங்கும் பிளிறிக் கொண்டே ஓடின. இதில் சுற்றுச்சுவர் நொறுங்கி விழுந்தது. அதில் பக்தர்கள் சிலர் சிக்கிக் கொண்டனர். கோயிலில் கூடியிருந்த பக்தர்கள் பயத்தில் அங்கும் இங்கும் சிதறி ஓடினர். அப்போது ஏற்பட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 30-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, ‘‘கோயில் திருவிழாவில் உயிரிழந்தவர்கள் அம்முகுட்டி, லீலா, ராஜன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. கோயில் திருவிழாவின் போது 2 யானைகளை ஊர்வலமாக அழைத்து செல்ல அனுமதி பெற்றுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 mins ago
இந்தியா
53 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago