பலதார மணத்தை எதிர்த்து வழக்கு: உச்ச நீதிமன்றம் விசாரிக்க ஒப்புதல்

By எம்.சண்முகம்

முஸ்லிம்கள் பின்பற்றும் ‘நிக்கா ஹலாலா’ மற்றும் பலதார மணத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் சம்மதம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

முஸ்லிம்களின் விவாகரத்து முறையான முத்தலாக் நடைமுறை சட்டவிரோதம் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பளித்துள்ள நிலையில், அவர்களது ‘நிக்கா ஹலாலா’ எனப்படும் நடைமுறை மற்றும் பலதார மணத்திற்கு எதிராக டெல்லியைச் சேர்ந்த சமீனா பேகம் உள்ளிட்ட சிலர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேகர் மற்றும் அஸ்வினி உபாத்யாயா, “இந்த வழக்கை தொடர்ந்துள்ள சமீனா பேகத்திற்கு வழக்கை வாபஸ் பெறும்படி மிரட்டல் வருகிறது. இந்த வழக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொண்டு 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு அனுப்பி விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும்” என்று வாதிட்டனர். வழக்கை விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள நீதிபதிகள் சம்மதம் தெரிவித்தனர்.

மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம், மத்திய அரசு சார்பில் இம்மனு குறித்து பதிலளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நிக்கா ஹலாலா

முஸ்லிம்கள் பின்பற்றும் ‘நிக்கா ஹலாலா’ நடைமுறையின்படி, திருமணமான தம்பதிகள் பிரிந்துவிட்டால், மீண்டும் சேர முடியாது. வேறு ஒருவருடன் திருமணம் முடித்து விவாகரத்து பெற்ற பின்பே மீண்டும் சேர முடியும். இதற்கிடையே, ‘இத்தத்’ என்ற குறிப்பிட்ட கால இடைவெளியும் பின்பற்ற வேண்டும். இந்த நடைமுறை சட்ட விரோதம் என்றும், பலதார மணத்தை ஊக்குவிக்கிறது என்றும் கூறி இதற்கு மனுதாரர் தடை கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்