புதுடெல்லி: மகா கும்பமேளாவில் பதஞ்சலி நிறுவனம் சார்பில் பக்தர்களுக்கு இலவச யோகா சொல்லிக் கொடுக்கும் நிகழ்வு நடந்தது. அதோடு “ஒவ்வொரு இந்தியரும் தங்கள் கலாச்சாரம், பாரம்பரியத்தைப் பாதுகாக்க ஒன்றிணைய வேண்டும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா களைகட்டியுள்ள நிலையில், யோகா குரு பாபா ராம்தேவ், அங்கு வந்திருந்த பக்தர்களுக்கு இலவச யோகா மற்றும் தியான முகாம் நடத்தினார். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். மகா கும்பமேளாவின் தெய்வீக சூழ்நிலையை அனுபவிக்கும் அதே வேளையில், பக்தர்கள் உடல்நலம், ஆன்மிகம் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை மேம்படுத்துவதற்கான தொடர்ச்சியான உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக இந்நிகழ்வு அமைந்துள்ளதாக பதஞ்சலி நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது.
ஒவ்வொரு இந்தியரும் தங்கள் கலாச்சாரம், பாரம்பரியத்தை பாதுகாக்க ஒன்றிணைய வேண்டும். சனாதன தர்மத்தின் கொள்கைகளை தீவிரமாக எடுத்துரைக்க வேண்டும். அப்போதுதான் நாட்டின் பாரம்பரியத்தை அச்சுறுத்தும் வெளிப்புற சக்திகளுக்கு எதிராக உறுதியாக நிற்க முடியும்.
அதேபோல் யோகாவின் நன்மைகளையும் அறிந்து கொள்ள வேண்டும். இந்த மகா கும்பமேளாவில், பதஞ்சலி நடத்திய நிகழ்வில் பங்கேற்றவர்கள் ஆன்மிக விழிப்புணர்வு பெற்றிருப்பார்கள். அவர்கள் சனாதன தர்மத்தின் சாரத்தை மதித்து, இந்தியாவின் கலாச்சார மற்றும் பொருளாதார வளர்ச்சியின் அடித்தளத்தை வலுப்படுத்தியுள்ளனர் என்று பதஞ்சலி நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
27 mins ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago