யூ.பி.எஸ்.சி. தேர்வு: மத்திய அரசு புதிய அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சிவில் சர்வீசஸ் தேர்வில் ஆங்கில திறனறிதல் தொடர் பான மதிப்பெண்கள், மாணவர் கள் அடுத்த கட்டத் தேர்வில் பங்கேற்பதற்கான தரப்படுத்து தல் மற்றும் தகுதி மதிப்பீட் டிற்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப் படாது என்று மத்திய அரசு அறிவித் துள்ளது.

2011-ம் ஆண்டு இத்தேர்வில் பங்கேற்றவர்களுக்கு, அடுத்த ஆண்டு நடைபெறும் சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வில் பங்கேற்க கூடுதல் வாய்ப்பு அளிக் கப்படும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.

மத்திய பணியாளர் தேர்வாணை யம் (யூ.பி.எஸ்.சி.) நடத்தும் சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வில், ஆங்கில திறனறித் தேர்வு கடந்த 2011-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இது ஆங்கிலம் அறிந்தவர்களுக்கு சாதகமான நடவடிக்கை என்றும், இந்தி அல்லது பிராந்திய மொழிகளை கல்வி கற்பதற்கான பயிற்றுமொழியாக கொண்ட மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள் என்றும் புகார் எழுந்தது. ஆங்கில திறனறித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். வரும் ஆகஸ்ட் 24-ம் தேதி நடைபெறவுள்ள முதல்நிலைத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இந்த விவகாரம் தொடர்பான முக்கிய அறிவிப்பை, மத்திய பணியாளர் பயிற்சித்துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) ஜிதேந்திர சிங் மக்களவையில் திங்கள்கிழமை வெளியிட்டார்.

அவர் கூறியதாவது: “சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வில் இரண்டாம் தாளில் இடம்பெற்றுள்ள ஆங்கில மொழி திறனறிதல் தொடர்பான மதிப் பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. அடுத்த கட்டத் தேர்வில் மாணவர் கள் பங்கேற்பதற்கான தகுதி மதிப்பீட்டுக்கு அந்த மதிப்பெண் கள் தேவையில்லை.

2011-ம் ஆண்டு சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வில் பங்கேற்ற மாணவர்களுக்கு, 2015-ம் ஆண்டு நடைபெறும் தேர்வில் பங்கேற்க கூடுதல் வாய்ப்பு வழங்கப்படும்” என்று ஜிதேந்திர சிங் தெரிவத்தார்.

அதே சமயம், வரும் ஆகஸ்ட் 24-ம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வின் இரண்டாம் தாளில் ஆங்கிலம் திறனறிதல் தொடர்பாக 9 கேள்விகள் இடம்பெற்றுள்ளன. அவற்றிற்கு 22 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த மதிப்பெண்கள் இனிமேல் தரப்ப டுத்தல் மற்றும் தகுதி மதிப்பீட்டிற்கு எடுத்துக்கொள்ளப் பட மாட்டாது.

மாணவர்கள் அதிருப்தி

மத்திய அரசின் முடிவை மாணவர்கள் ஏற்றுக்கொள்ள வில்லை. ஆங்கில திறனறிதல் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். அது வரை போராட்டம் தொடரும் என்று அவர் கள் அறிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE