கோதாவரி நதியில் படகு கவிழ்ந்து விபத்து: தண்ணீரில் மூழ்கி 2 பேர் பரிதாப பலி; 8 பேரை  மீட்கும் பணி தீவிரம்- 30 பேர் உயிருடன் மீட்பு

By என்.மகேஷ் குமார்

அமராவதி

ஆந்திர மாநிலத்தில் நேற்று மீண்டும் ஒரு படகு விபத்தில் சிக்கியது. இதில் 8 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். இவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 30 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். 2 பேர் உயிரிழந்தனர்.

கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் அடிக்கடி படகு விபத்துகள் நடந்து வருகிறது. சமீபத்தில்கூட 2 படகுகள் விபத்தில் சிக்கின. இதில் 20-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில், நேற்று மாலையில் தலாரி பாளையம் பகுதியில் இருந்து பள்ளி மாணவ, மாணவியர், விவசாய கூலி தொழி

லாளர்கள், சிறு வியாபாரிகள் என 40 பேர் ஒரு நாட்டு படகில் ஏறி, மறு கரையில் உள்ள பசுவுலங்கா கிராமத்துக்கு சென்று கொண்டிருந்தனர்.

தினமும் இவர்கள் படகுகளின் உதவியோடுதான் அடுத்த கிராமங்களுக்கு செல்வது வழக்கம். அதுபோல நேற்று மாலையும், அனைவரும் அவரவர் வீடுகளுக்கு படகில் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, வழியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஒரு பாலத்தின் தூண் மீது படகு மோதி விபத்துக்குள்ளானது. இதையடுத்து அந்தப் படகு கவிழ்ந்தது. கரையில் இருந்த சிலர் இதைக் கண்டதும் விரைந்து சென்று தண்ணீரில் தத்தளித்த 30 பேரை காப்பாற்றினர்.

மேலும் 10 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில்  2 பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர். இதனால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. இவர்களில் பலர் பள்ளி மாணவ மாணவியர் என தெரியவந்துள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார், தீயணைப்பு படையினர், வருவாய் துறையினர் மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். ஆனால், போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் மீட்புப் பணிக்கு தடங்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

எனினும், மீப்புப் பணிகளில் தொடர்ந்து ஈடுபடுமாறு, கிழக்கு கோதாவரி மாவட்ட ஆட்சியர் கார்திகேயாவுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார். மாவட்ட எஸ்.பி. விஷால் குன்னி மற்றும் அதிகாரிகள் மீட்புப் பணிகளை கண்காணித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

49 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

மேலும்