நாகாலாந்தின் லாங்லெங் நகரில் 15 வயது சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞரை நிர்வாணமாக்கி, சாலையில் அழைத்து வந்து மக்கள் தர்ம அடிகொடுத்த சம்பவம் நடந்துள்ளது.
நாகாலாந்து மாநிலம், லாங்லெங் நகரைச் சேர்ந்த 29வயது இளைஞர் லாங்யா போம். இவருக்குத் திருமணமாகி, மனைவி இருக்கிறார். லாங்யா போம் வீட்டுக்குப் பக்கத்து தெருவைச் சேர்ந்த 15-வயது சிறுமி நாள்தோறும் லாங்யா போம் வீட்டுக்கு டிவி பார்க்க வருவார்.
இந்நிலையில்,கடந்த 27-ம் தேதி லாங்யா போம் வீட்டுக்கு வந்த சிறுமியை, உறவினர் அழைத்துவரக்கூறியிருப்பதாகக் கூறி லாங்கா போம் மறைவான இடத்துக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்துள்ளார். இதைவெளியே கூறினால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
ஆனால், அந்த சிறுமி நடந்த விவரங்கள் அனைத்தையும் பெற்றோரிடம் கூறி கண்ணீர் விட்டுள்ளார். இதை அறிந்த பெற்றோர், உறவினர், மக்கள் லாங்கா போம் வீட்டுக்குச் சென்றனர். ஆனால், அந்த இளைஞர் அங்கு இல்லை. மேலும் சிறுமி பாதிக்கப்பட்ட விவகாரம் பெண்கள் அமைப்புக்குத் தெரிந்து அவர்களும் போராட்டத்தில் இறங்கினார்கள்.
இந்நிலையில், அந்த இளைஞர் லாங்யா போமை கண்டுபிடித்த மக்கள், அவருக்குத் தர்ம அடிகொடுத்தனர். அதுமட்டுமல்லாமல், அந்த இளைஞரின் உடைகளைக் களைந்து நிர்வாணப்படுத்தி சாலையில் இழுத்துவந்தனர். கழுத்தில் நான்சிறுமியை பலாத்காரம் செய்தவன் என்ற அறிவிப்பு பதாகையை தொங்கவிட்டு மின்கம்பத்தில் கட்டி வைத்து, அதன்பின் போலீஸில் ஒப்படைத்தனர்.
இதையடுத்து போலீஸார் லாங்யா போமை கைது செய்தனர்.பாதிக்கப்பட்ட அந்தச் சிறுமிக்கும், லாங்யா போமுக்கும் மருத்துவமனையில் பரிசோதனை நடத்தப்பட்டு பலாத்காரம் நடந்தது உறுதி செய்யப்பட்டது
இதையடுத்து லாங்யா போம் மீது பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
49 mins ago
இந்தியா
39 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago