மும்பை: கடந்த 15-ம் தேதி மும்பையில் உள்ள நடிகர் சயீப் அலிகான் வீட்டில் புகுந்த மர்ம நபர், அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிவிட்டார். இது தொடர்பாக, சத்தீஸ்கரை சேர்ந்த ஆகாஷ் கைலாஷ் கனோஜியா கடந்த 18-ம் தேதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். பிறகு அவர் விடுவிக்கப்பட்டார்.
இதுகுறித்து ஆகாஷ் கைலாஷ் கனோஜியா கூறியதாவது: நான் மும்பையின் கொலாபா பகுதியை சேர்ந்தவன். எனக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது. எனது வருங்கால மனைவியை நேரில் பார்க்க மும்பையில் இருந்து சத்தீஸ்கரின் பிலாஸ்பூர் நகருக்கு ரயிலில் சென்று கொண்டிருந்தேன். துர்க் நிலையத்தில் ரயில் நின்றபோது ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் என்னை வலுக்கட்டாயமாக ராய்ப்பூருக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு மும்பை போலீஸார் என்னிடம் விசாரணை நடத்தினர். அப்போது அடித்து உதைத்து துன்புறுத்தினர். நடிகர் சயீப் அலிகானை கத்தியால் குத்தியதாக குற்றம் சாட்டினர். எனது விளக்கத்தை போலீஸார் ஏற்கவில்லை. இந்த வழக்கு தொடர்பாக கடந்த 19-ம் தேதி வங்கதேசத்தை சேர்ந்த ஷரிபுல் இஸ்லாம் ஷெசாத் என்பவர் கைது செய்யப்பட்டார். அதன்பிறகே என்னை விடுவித்தனர்.
போலீஸார் என்னை கைது செய்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் முன்னணி ஊடகங்களில் வெளியானது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதன் காரணமாக எனது திருமணம் பாதியில் நின்றுவிட்டது. நான் பணியாற்றிய நிறுவனம் என்னை வேலையில் இருந்து நீக்கிவிட்டது. நண்பர்கள், உறவினர்கள் என்னை விட்டு விலகி சென்றுவிட்டனர். சந்தேகத்தின்பேரில் ஒருவரை கைது செய்யும்போதுஅவரது புகைப்படம், விவரங்களை ஊடகங்களில் வெளியிடக்கூடாது. இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் மற்றும் நீதிமன்றங்கள் கண்டிப்பான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago