உத்தராகண்டின் பொது சிவில் சட்டத்துக்கு முஸ்லிம்கள் எதிர்ப்பு: நீதிமன்றத்தை நாட முடிவு

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: உத்தராகண்டில் பாஜக அரசு, பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தி உள்ளது. இதற்கு முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், இச்சட்டத்தை எதிர்த்து ஜமாத்-எ-உலாமா ஹிந்த் அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க தயாராகிறது.

திருமணம், விவாகரத்து, தத்தெடுப்பு, வாரிசுரிமை ஆகிய விவகாரங்களில் ஒவ்வொரு மதத்திலும் தனித்தனி சட்டங்கள் உள்ளன. இதை மாற்றி, அனைத்து மதத்தினரும் ஒரே சட்டத்தைப் பின்பற்றும் வகையில் நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை (UCC) கொண்டுவருவது பாஜகவின் முக்கிய கொள்கையாக உள்ளது. இதற்கான நடவடிக்கைகளில் மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு முயற்சிக்கிறது.

இதனிடையே, உத்தராகண்டில் கடந்த 2022-ல் நடந்த பேரவைத் தேர்தலின்போது, மாநிலத்தில் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால், பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. அந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்தது. இந்நிலையில், தற்போது பொது சிவில் சட்டத்தை பாஜக அரசு அமல்படுத்தியிருக்கிறது. உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, பொது சிவில் சட்டத்தின் அரசாணையை நேற்று வெளியிட்டார்.

பொது சிவில் சட்ட விதிகளையும் அறிமுகம் செய்தார். பொது சிவில் சட்டம் நடைமுறைக்கு வந்தது தொடர்பான இணையதளத்தையும் முதல்வர் தொடங்கி வைத்தார். இதற்கு முஸ்லிம்கள் இடையே கடும் அதிருப்தி கிளம்பியுள்ளது. இந்திய முஸ்லிம்களின் முக்கிய அமைப்புகளில் ஒன்றான ஜமாத்-எ-உலாமா ஹிந்த், சட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கத் தயாராகிறது.

இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவரான மவுலானா அர்ஷத் மதானி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘பொது சிவில் சட்டத்தை எதிர்த்து நாம் உத்தராகண்ட் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்போம். எங்களது ஷரியத் சட்டத்துக்கு முற்றிலும் எதிரான இந்த சட்டத்தை முஸ்லிம்களால் ஏற்க முடியாது. ஏனெனில், எந்த ஒரு பிரச்சினையையும் சகித்துக் கொள்ளும் முஸ்லிம்களால் தனது மதத்துக்கு இடரானவற்றை சிறிதும் சகிக்க முடியாது.’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, உத்தரகண்டின் தலைநகரான டேராடூனில் திரளாகக் கூடிய முஸ்லிம்கள் பொது சிவில் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆர்பாட்டம் நடத்தினர். சில முக்கிய சாலைகளில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தால் போக்குவரத்து இடையூறுகள் ஏற்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

22 hours ago

மேலும்