வக்பு திருத்த சட்ட மசோதாவுக்கு ஜேபிசி ஒப்புதல்: பாஜக கூட்டணி உறுப்பினர்களின் திருத்தங்கள் மட்டுமே ஏற்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: வக்பு திருத்த சட்ட மசோதாவுக்கு நாடாளுமன்ற கூட்டுக் குழு (ஜேபிசி) ஒப்புதல் அளித்துள்ளது. இதில், ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பரிந்துரைத்த 14 திருத்தங்கள் ஏற்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில், எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த திருத்தங்கள் ஓட்டெடுப்பின் மூலம் நிராகரிக்கப்பட்டன.

தற்போதுள்ள வக்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள மத்திய அரசு, இது தொடர்பான திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியது. மத்திய சிறுபான்மை விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு, திருத்த மசோதாவை மக்களவையில் அறிமுகப்படுத்தினார். இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, இந்த திருத்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் ஆய்வுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதையடுத்து, பாஜக தலைவர் ஜகதாம்பிகா பால் தலைமையிலான நாடாளுமன்றக் கூட்டுக் குழு இந்த மசோதா தொடர்பாக ஆய்வு நடத்தியது. இந்த மசோதாவில் தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்பிக்கள் 23 திருத்தங்களும், எதிர்க்கட்சிகள் சார்பில் 44 திருத்தங்களும் முன்மொழியப்பட்டன.

இந்நிலையில், இன்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டுக் குழுக் கூட்டத்தில், இந்தத் திருத்தங்கள் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜகதாம்பிகா பால், “44 திருத்தங்கள் விவாதிக்கப்பட்டன. ஆறு மாதங்களில் நடைபெற்ற விரிவான விவாதங்களில் அனைத்து உறுப்பினர்களிடமிருந்தும் திருத்தங்களை நாங்கள் கோரினோம். இது எங்கள் இறுதிக் கூட்டம். பெரும்பான்மை (வாக்கு) அடிப்படையில் 14 திருத்தங்களை குழு ஏற்றுக்கொண்டது.

எதிர்க்கட்சி எம்பிக்களால் முன்மொழியப்பட்ட திருத்தங்கள், வாக்கெடுக்குப் பின் நிராகரிக்கப்பட்டன. ஏனெனில், அந்த திருத்தங்களுக்கு 10 உறுப்பினர்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்திருந்தனர். ஆனால், 16 உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இறுதி அறிக்கை ஜனவரி 31-ம் தேதிக்குள் சமர்ப்பிக்கப்படும்" என தெரிவித்தார். அதேவேளையில், நாடாளுமன்றக் கூட்டுக் குழு தலைவர் சர்வாதிகாரி போல நடந்து கொண்டதாகவும், அவரது நடவடிக்கை ஜனநாயக செயல்முறையை சீர்குலைத்துள்ளதாகவும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்த நாடாளுமன்றக் கூட்டுக் குழுவில், தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த 16 எம்.பி.க்களும், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 10 எம்.பி.க்களும் உள்ளனர். இந்தக் குழு 30 தடவைக்கு மேல் கூடி இந்த மசோதா குறித்து விவாதித்தது. அப்போது ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே காரசார விவாதம் நடைபெற்றது. கடந்த நவம்பர் 29-க்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. பின்னர், இந்த காலக்கெடு பிப்ரவரி 13 வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று நடைபெற்ற கடைசி கூட்டத்தில் வக்பு திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது கவனித்தக்கது.

வக்பு சொத்துகளை ஒழுங்குபடுத்தவும், சொத்துகளை நிர்வகிப்பதில் உள்ள சிக்கல்கள் மற்றும் சவால்களைத் தீர்க்கவும் 1995-ம் ஆண்டு வக்பு சட்டத்தை திருத்துவதே இந்த மசோதாவின் நோக்கமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்