கடனை திருப்பி செலுத்தாததால் பெண்ணை தாக்கி மொட்டை அடித்த சுயஉதவிக் குழு பெண்கள்

By செய்திப்பிரிவு

கடனை திருப்பிச் செலுத்தாத பெண்ணை தாக்கி, மொட்டை அடித்த சுய உதவிக் குழு பெண்கள் மீது திரிபுரா போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திரிபுரா மாநிலத்தின் செபஹிஜலா மாவட்டத்தில் உள்ள பிசால்கர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவருக்காக சுயஉதவிக் குழுவில் கடன் பெற்றுள்ளார். ஆனால் அந்த கடனை அவர் திருப்பிச் செலுத்தவில்லை. இந்நிலையில் அந்த பெண் வீட்டுக்கு சுயஉதவிக் குழுவைச் சேர்ந்த 15 முதல் 20 பெண்கள் சமீபத்தில் சென்று கடனை உடனடியாக திருப்பிச் செலுத்தும்படி கூறியுள்ளனர். தற்போது தன்னிடம் பணம் எதுவும் இல்லை என கடன் வாங்கிய பெண் கூறியுள்ளார். இதனால் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த பெண்கள் அவரை தாக்கி வீட்டுக்கு வெளியே இழுத்து வந்து அந்தப் பெண்ணுக்கு பாதி மொட்டை அடித்தனர்.

இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த பிசால்கர் மகளிர் காவல் நிலையம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. சுயஉதவிக் குழுவைச் சேர்ந்த 20 பெண்கள் மீது பிசால்கர் மகளிர் காவல் நிலையத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

மேலும்