கர்நாடகா | லாரி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 11 பேர் உயிரிழப்பு: 15 பேர் படுகாயம்

By செய்திப்பிரிவு

பெங்களூரு: கர்நாடகாவின் உத்தர கன்னடா மாவட்டத்தில் 50 மீட்டர் ஆழமான பள்ளத்தில் லாரி கவிழ்ந்த விபத்தில் லாரியில் பயணித்த 11 பேர் உயிரிழந்துள்ளனர். 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

தேசிய நெடுஞ்சாலை 63-ல், யெல்லாபூர் தாலுகாவில் உள்ள குல்லாபூர் கிராமத்திற்கு அருகில் இந்த விபத்து நேரிட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள், ஹாவேரி மாவட்டத்தின் சவனூர் என்ற பகுதியில் இருந்து கும்தா சந்தைக்கு காய்கறிகளை விற்கச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது.

லாரியில் 30-க்கும் மேற்பட்டோர் இருந்ததாக போலீஸார் சந்தேகிக்கின்றனர். அவர்களில் பெரும்பாலோர் சவனூரைச் சேர்ந்தவர்கள். காயமடைந்தவர்களை காவல்துறையினரும், அப்பகுதி மக்களும் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேற்குத் தொடர்ச்சி காவல் ஆய்வாளர் அமித் சிங் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டனர்.

“பள்ளம் காரணமாகவோ அல்லது ஓட்டுநர் சமநிலையை இழந்ததன் காரணமாகவோ லாரி கவிழ்ந்திருக்கலாம். விபத்துக்கான காரணத்தை நாங்கள் கண்டறிந்து வருகிறோம்.” என்று காவல் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

கேஎம்சி மருத்துவமனை இயக்குநர் எஸ்.எஃப். கம்மர் கூறுகையில், “ஒரு நோயாளி இறந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். மீதமுள்ள 11 பேர் எங்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் உடல்நிலை தொடர்பாக பரிசோதனைகள் நடைபெற உள்ளன. தற்போது அவர்கள் ஆபத்தில் இருந்து மீண்டுவிட்டனர். எனினும், தொடர்ச்சியான கண்காணிப்பு தேவை.” என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்