உத்தரப் பிரதேசத்தில் பலத்த மழை: வீடுகளைச் சூழ்ந்த வெள்ளம்

By ஏஎன்ஐ

உத்தரப் பிரதேசத்தின் மொராதாபாத் மாவட்டத்தில் இடைவிடாமல் மழை பெய்து வருவதால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் பள்ளிக்கு செல்லமுடியாத நிலை இன்னும் தொடர்கிறது. எல்லா பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியுள்ளதால் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

உள்ளூர்வாசி ஒருவர் ஏஎன்ஐயிடம் இதுபற்றி தெரிவிக்கையில், ''கடந்த 15 நாட்களாக மழைவெள்ள நீரின் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆறாவது வருடமாக இப்படி தொடர்கிறது. இது எங்களுக்கும் எங்கள் குழந்தைகளுக்கும் மிகவும் சிரமமாக உள்ளது.

எங்களால் அவர்களை பள்ளிக்கு அழைத்துச் செல்லமுடியவில்லை. எங்கும் நீர்சூழ்ந்து ஆற்றுவெள்ளம்போல காட்சியளிக்கிறது. மருந்து வாங்கக் கூட வீட்டைவிட்டுவெளியே வரமுடியவில்லை. இதுநாள் வரை எங்களுக்கு எந்த உதவியும் எங்கிருந்தும் வரவில்லை.'' என்றார்.

உத்தரப் பிரதேசத்தில் 35 மாவட்டங்களில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மழையால் 60 பேர் உயிரிழந்துள்ளனர். 53 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடும் மழை காரணமாக பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்