சத்தீஸ்கரில் போலீஸாருடன் நடந்த மோதலில் 14 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

By செய்திப்பிரிவு

காரியாபந்த்: சத்தீஸ்கர் மாநிலம் காரியாபந்த் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 14 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீஸார் இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்தனர்.

முன்னதாக திங்கள்கிழமை நடந்த தாக்குதலில், இரண்டு பெண் நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர், ஒரு கோப்ரா வீரர் காயமடைந்தார் என்று தெரிவித்திருந்தனர். போலீஸ் அதிகாரிகள் மீண்டும் கூறுகையில், "சத்தீஸ்கர் - ஒடிசா மாநிலத்தின் எல்லையில் உள்ள மெயின்பூர் காவல்நிலைய எல்லைப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் திங்கள்கிழமை இரவு மற்றும் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 14 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் ரூ.1 கோடி பரிசு தொகை அறிவிக்கப்பட்ட நக்சலைட்டும் அடக்கம்.

மாவட்ட ரிசர்வ் படை (டிஆர்ஜி), மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்), சத்தீஸ்கரின் கோப்ரா மற்றும் ஒடிசாவின் சிறப்பு நடவடிக்கை குழு (எஸ்ஒஜி) ஆகியோர் அடங்கிய கூட்டுக்குழுவினர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஒடிசாவின் நுபாடா மாவட்டதிலிருந்து 5 கி.மீ., தொலைவில் இருக்கும், சத்தீஸ்கரின் குலரிகாட் காப்புக் காட்டில் நக்சலைட்டுகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த உளவுத்துறையின் ரகசிய தகவலின் அடிப்படையில் ஜன.19ம் தேதி இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டது.

துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தில் இருந்து ஏராளமான துப்பாக்கிகள், ஐஇடி வெடிமருந்துகள், தானியங்கித் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. துப்பாக்கிச் சண்டை தொடர்ந்து வருகிறது. நக்சலைட்டுக்களின் பலி எண்ணிக்கு மேலும் அதிகரிக்கலாம்" என்று தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

42 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்