சென்னை விமான நிலையத்தில் விரைவு குடியேற்ற சேவை திட்டம்: அமித் ஷா இன்று தொடங்குகிறார்

By செய்திப்பிரிவு

அகமதாபாத்: சென்னை உட்பட 7 விமான நிலை​யங்​களில் விரைவான குடியேற்ற சேவை திட்​டத்தை (பாஸ்ட் டிராக் இமிகிரேஷன்)மத்திய அமைச்சர் அமித் ஷா இன்று தொடங்கி வைக்கிறார்.

நாடு முழு​வதும் 21 முக்கிய விமான நிலை​யங்​களில் நம்பகமான பயணி​யருக்கான விரைவான குடியேற்ற சேவை திட்டம் (எப்​டிஐ-டிடிபி) செயல்​படுத்​தப்பட உள்ளது.

இத்திட்​டத்தை டெல்லி இந்திரா காந்தி விமான நிலை​யத்​தின் 3 முனை​யத்​தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த ஆண்டு ஜூன் 22-ம் தேதி தொடங்கி வைத்​தார்.

இதையடுத்து மும்பை, சென்னை, கொல்​கத்தா, பெங்​களூரு, ஹைதரா​பாத், கொச்சி, அகமதாபாத் ஆகிய 7 விமான நிலை​யங்​களில் இத்திட்டம் இன்று தொடங்​கப்​படுகிறது. அகமதாபாத்​தில் இருந்து மத்திய அமைச்சர் அமித் ஷா இத்திட்டத்தை தொடங்கி வைக்கிறார். பயணி​களுக்கு உலகத்​தரம் வாய்ந்த வசதிகளை வழங்​க​வும் சர்வதேச பயணத்தை தடையற்​ற​தாக​வும் பாது​காப்​பாக​வும் ​மாற்​ற​ இத்​திட்​டம் தொடங்​கப்​பட்​டுள்​ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

12 mins ago

இந்தியா

42 mins ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்