புதுடெல்லி: “நானும் தவறு செய்கிறேன். தவறுகள் தவிர்க்க முடியாதவை. ஏனென்றால் நானும் ஒரு மனிதன்தானே. கடவுள் கிடையாதே” என்று பிரதமர் மோடி கூறினார்.
ஜெரோதா இணை நிறுவனர் நிகில் காமத் தொகுத்து வழங்கும் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பல்வேறு விஷயங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். பீப்பிள் பை டபிள்யூடிஎஃப் (People by WTF) என்ற தலைப்பில் நிகில் காமத் பாட்காஸ்ட் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். அதில் பல்வேறு பிரபலங்களும் கலந்து கொண்டு பேசி வருகின்றனர். இதன் 6-வது எபிசோட் பீப்பிள் வித் தி பிரைம் மினிஸ்டர் நரேந்திர மோடி (People with The Prime Minister Narendra Modi) என்ற பெயரில் ஒளிபரப்பாக இருக்கிறது.
இந்நிலையில், நிகில் காமத் இந்த பாட்காஸ்டுக்கான டிரைலரை தன்னுடைய எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். விரைவில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட இருக்கும் நிலையில் 2 நிமிடம் 13 வினாடிகள் கொண்ட ட்ரெய்லர் முதல் கட்டமாக வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியது: “நான் குஜராத் முதல்வராக இருந்தபோது ஓர் உரை நிகழ்த்தினேன். மக்கள் தவறு செய்கிறார்கள் என்று நான் பகிரங்கமாகக் கூறினேன். நானும் தவறு செய்கிறேன். தவறுகள் தவிர்க்க முடியாதவை. ஏனென்றால் நானும் ஒரு மனிதன்தானே. கடவுள் கிடையாது.
» விக்கிரவாண்டி பள்ளியில் குழந்தை பலியான சம்பவம்: ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க ஐகோர்ட் உத்தரவு
» ’சமூகப் பதற்றத்தை உருவாக்க வல்லவை சீமான் கருத்துகள்’ - உயர் நீதிமன்றம் அதிருப்தி
இந்தியா நடுநிலையான நாடல்ல எனப் பலமுறை கூறியுள்ளோம். நான் அதை மீண்டும் மீண்டும் சொல்கிறேன். நான் அமைதியின் பக்கம் இருக்கிறேன்.
எனக்கும், சீனப் பிரதமர் ஜி ஜின்பிங்குக்கும் இடையே ஒரு சிறப்புப் பிணைப்பு இருக்கிறது. சீனப் பயணியும், தத்துவ ஞானியுமான யுவான் சுவாங், குஜராத்தில் என்னுடைய கிராமத்தில் வசித்திருக்கிறார். இதுதொடர்பான திரைப்படம் தயாராகி வருவதாக நான் கேள்விப்பட்டு, சீன தூதரத்துக்கு ஒரு கடிதம் எழுதினேன். யுவான் சுவாங் குறித்த அந்தப் படத்தில் எங்களுடைய கிராமத்தின் பெயரும் இடம்பெறவேண்டும் என்று நான் வலியுறுத்தினேன்.
2014-ல் நான் பிரதமரானபோது, பல்வேறு உலக தலைவர்கள் என்னை அழைத்து வாழ்த்தினேன். அப்போது சீனப் பிரதமர் ஜீ ஜின்பிங்கும் என்னை அழைத்து வாழ்த்தினார். அப்போதுதான் அவர் குஜராத்திலுள்ள எங்கள் கிராமமான வத்நகருக்கு வர விரும்புவதாகத் தெரிவித்தார். அப்போதுதான் அவருக்கும், எனக்கும் சிறப்புப் பிணைப்பு இருப்பதை உணர்ந்தேன். இந்தியாவுக்கு யுவான்சுவாங் வந்தபோது நீண்ட காலம் எங்கள் கிராமத்தில் தங்கியிருந்தார் என்பதை ஜீ ஜின்பிங். இப்படித்தான் எனக்கும், அவருக்கும் இடையே பிணைப்பு உள்ளது.
சிறுவயதில் பள்ளியில் படிக்கும்போது தேர்வுகளில் போட்டி இருந்தால் நான் அதிலிருந்து தப்பித்து ஓடிவிடுவேன். இருந்தபோதும் எப்படியாவது தேர்வில் வெற்றி பெற்று விடுவேன். தேர்வுகளை விட, பல்வேறு விதமான போட்டிகளில்தான் நான் கவனம் செலுத்தினேன்” என்று அவர் அதில் கூறியுள்ளார். >>வீடியோ லிங்க்
முக்கிய செய்திகள்
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago