புதுடெல்லி: டெல்லியில் வாழும் ஜாட் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதாக பாஜக அளித்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை என அர்விந்த் கேஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.
டெல்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கேஜ்ரிவால் நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 2015-ல் டெல்லி ஜாட் சமூகத்தினரின் தலைவர்களை பிரதமர் இல்லத்துக்கு பாஜக அழைத்து பேசியது. அப்போது மத்திய ஓபிசி பட்டியலில் டெல்லி ஜாட் சமூகத்தினர் சேர்க்கப்படுவார்கள் என உறுதி அளிக்கப்பட்டது. 2019-ல் மத்திய அமைச்சர் அமித்ஷா மீண்டும் இந்த வாக்குறுதியை அளித்தார். என்றாலும் இதுவரை இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.
ராஜஸ்தானை சேர்ந்த ஜாட் மாணவர்கள் டெல்லி பல்கலைக்கழகத்தில் இடஒதுக்கீடு பெறுகின்றனர். ஆனால் மத்திய ஓபிசி பட்டியலில் இடம்பெறாததால் டெல்லியை சேர்ந்த ஜாட் மாணவர்கள் இடஒதுக்கீடு பெறமுடியவில்லை. எனவே டெல்லி ஜாட் சமூகத்தை மத்திய ஓபிசி பட்டியலில் சேர்க்க கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளேன். இதற்காக ஆம் ஆத்மி தொடர்ந்து போராடும். இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
27 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago