பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கைது செய்யப்பட்டது குறித்து அவருடைய நண்பர் மோடி என்ன சொல்லப் போகிறார் என காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது.
கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் நரேந்திர மோடி ஆப்கானிஸ்தான் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பினார். அப்போது வழியில் திடீரென லாகூர் சென்று அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். நவாஸின் பேத்தி திருமண நிச்சயதார்த்தத்திலும் பங்கேற்றார். பிரதமரான பிறகு மோடி பாகிஸ்தான் சென்றது இதுவே முதல் முறை.
இந்நிலையில், பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் சிக்கிய நவாஸ் ஷெரீபின் பதவி பறிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், மோடி பாகிஸ்தான் சென்ற போது நவாஸுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை காங்கிரஸ் கட்சி ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. அதனுடன், “நவாஸ் ஷெரீப் ஊழல் வழக்கில் சிறையில்அடைக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து நவாஸின் நண்பர் மோடி என்ன சொல்லப் போகிறார் என தெரிந்துகொள்ள விரும்புகிறோம்” என பதிவிடப்பட்டுள்ளது. முன்னதாக, பாகிஸ்தான் தெரீக்-ஐ-இன்சாப் தலைவர் இம்ரான் கானும் நவாஸ்-மோடி நட்பு குறித்து விமர்சனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago