புதுடெல்லி: டெல்லி முதல்வர் அரசு இல்லம் நிர்ணயிக்கப்பட்ட தொகையை மீறி ரூ.33 கோடிக்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது என்று மத்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் உள்ளது. முதல்வராக அர்விந்த் கேஜ்ரிவால் பதவி வகித்தார். அவருக்கு ஒதுக்கப்பட்ட அரசு இல்லத்தை புதுப்பிக்க கோடிக்கணக்கான ரூபாயை வீணாக செலவு செய்ததாக பாஜக, காங்கிரஸ் கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில், மத்திய கணக்குத் தணிக்கையாளர் (சிஏஜி) நடத்திய ஆய்வில் அளவுக்கதிகமாக செலவு செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: டெல்லி முதல்வர் அரசு இல்லத்தை புதுப்பிக்க ரூ.7.9 கோடி நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், ரூ.33 கோடி செலவிடப்பட்டுள்ளது. முதல்வர் இல்லத்தைப் புதுப்பிக்கும் பணி கடந்த 2020-ம் ஆண்டு தொடங்கியது. அதில் ரூ.28.9 லட்சத்துக்கு 88 இஞ்ச் எல்ஜி டிவி பொருத்தப்பட்டுள்ளது. அத்துடன், சோனி உட்பட பல்வேறு நிறுவனங்களின் 10 டிவி.க்கள் ரூ.43.9 லட்சத்துக்கு வாங்கப்பட்டுள்ளது. ரூ.3.2 லட்சத்தில் பல கதவுகள் கொண்ட பிரிட்ஜ், ரூ.1.8 லட்சத்தில் மைக்ரோ ஓவன், ரூ.6.5 லட்சத்தில் ஸ்டீம் ஓவன், ரூ.1.9 லட்சத்தில் வாஷிங் மெஷின், ரூ.13 லட்சத்தில் 10 படுக்கை, சோபாக்கள் வாங்கப்பட்டுள்ளன.
அத்துடன் டெல்லி முதல்வர் இல்லத்தில் ஆடம்பர குளியல் தொட்டி (ஜாகுஸ்ஸி), நீராவி குளியல் (சானா), மசாஜ் அறை (ஸ்பா) போன்றவற்றை பொதுப் பணித் துறை நிறுவியுள்ளது. அத்துடன் வேலையாட்கள் தங்க ரூ.19.8 கோடியில் 7 விடுதிகள் கட்டப்பட்டுள்ளன. டெல்லி முதல்வர் இல்லத்தைப் புதுப்பிக்கும் பணி கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை நீடித்துள்ளது. இவ்வாறு சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
» நடிகர் அல்லு அர்ஜுனுக்கு மீண்டும் நோட்டீஸ்
» டிஜிட்டல் அரஸ்ட்டில் சிக்கியது எப்படி? - பிரபல யூடியூபர் அங்குஷ் கண்ணீர் தகவல்
தவிர ஆடம்பர பொருட்கள், ஓவியங்கள், கலைப் பொருட்கள் என ஏராளமாக வாங்கி முதல்வர் இல்லம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. முதல்வர் அரசு இல்லத்துக்கு செலவிடப்பட்ட தொகை, கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது என்றும், இன்றும் நிறைய ஆவணங்கள் இல்லை என்று சிஏஜி கூறியுள்ளது. இந்த அறிக்கை டெல்லி துணை நிலை ஆளுநரிடமும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பொதுப் பணித் துறை செய்த பணிகள் பல முறை மாற்றப்பட்டுள்ளது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதை சிஏஜி அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. டெல்லி முதல்வர் இல்லத்துக்கு கேஜ்ரிவால் அரசு கோடிக்கணக்கில் செலவு செய்த விவகாரம் சட்டப்பேரவை தேர்தலில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago