புதுடெல்லி: கிழக்கு டெல்லி சாகர்பூரைச் சேர்ந்தவர் துஷர் சிங் பிஸ்த் (23). பிபிஏ பட்டம் பெற்ற இவர் நொய்டாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைக்கு ஆட் களை தேர்வு செய்யும் நபராக பணியாற்றுகிறார். இவர் பம்பிள் மற்றும் ஸ்னாப்சாட் போன்ற பிரபல டேட்டிங் செயலிகளில் போலி பெயரில் கணக்கு தொடங்கி இந்தியா வந்திருக்கும் அமெரிக்க மாடல் என அறிமுகம் செய்துள்ளார்.
செயலி ஒன்றின் மூலம் விர்சுவல் சர்வதேச மொபைல் எண்ணை பெற்று அதை பயன்படுத்தியுள்ளார். பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஒரு மாடலின் போட்டோவை இவர் பயன்படுத்தியுள்ளார். இதைப் பார்த்து 18 வயது முதல் 30 வயதுள்ள பெண்கள் பலர் இவருடன் நட்பை ஏற்படுத்தியுள்ளனர். இவர்களின் நம்பிக்கையை பெற்றபின்பு, போன் எண்கள், தனிப்பட்ட போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை கேட்டு பெற்றுள்ளார். மாடலிங் துறைக்கு செல்ல விரும்பும் பெண்கள் கவர்ச்சி உடையில் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பியுள்ளனர்.
முதலில் பொழுதுபோக்குக்காக இந்த செயலில் ஈடுபட்ட துஷர் சிங், நாளடைவில் அந்த பெண்களை மிரட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபடத் தொடங்கினார். அவர்கள் அனுப்பிய கவர்ச்சியான போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை ஆபாச வலைதளங்களில் விற்று விடுவதாக கூறி பணம் கேட்டு மிரட்டியுள்ளார். சிலர் இதற்கு பயந்து துஷர் சிங் கேட்கும் பணத்தை அவருக்கு அனுப்பியுள்ளனர். இதுபோன்ற மோசடியில் கடந்த 3 ஆண்டுகளாக ஈடுபட்டு 700 பெண்களை துஷர் சிங் ஏமாற்றியுள்ளார்.
கடந்த ஆண்டு இவரது வலையில் சிக்கிய டெல்லி பல்கலைக்கழக மாணவி ஒருவர் மேற்கு டெல்லி சைபர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். துஷர் சிங்கின் செயல்பாடுகளை கண்காணித்த போலீஸார் அவர் வசிக்கும் சாகர்பூருக்கு சென்று அவரை கைது செய்து அவரது மொபைல்போனை பறிமுதல் செய்தனர். குற்றச் செயல்களுக்கு பயன்படுத்திய விர்சுவல் சர்வதேச போன் எண்ணுடன் கூடிய மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் ஏராளமான தகவல்கள் உள்ளன. டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பல பெண்கள் அவரிடம் சாட் செய்திருக்கும் தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில் 4 பேரிடம் அவர் பணம் பறித்துள்ளது தெரியவந்தது. அவரிடம் 13 கிரெடிட் கார்டுகள் இருந்தன. அவரிடம் 2 வங்கி கணக்குகள் இருந்துள்ளன. ஒரு கணக்கை பெண்களிடம் இருந்து பணம் பறிப்பதற்காக மட்டும் பயன்படுத்தியுள்ளார். 2 வங்கி கணக்கு விவரங்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இவரது தந்தை டிரைவராக பணியாற்றுகிறார். தாய் இல்லத்தரசி. சகோதரி குருகிராமில் ஒரு நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago