புதுடெல்லி: கிராமங்களில் உள்ள மக்களுக்கு கண்ணியமான வாழ்க்கையை வழங்குவதே தனது அரசின் முன்னுரிமை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
கிராமப்புற இந்தியா திருவிழா 2025-ஐ பிரதமர் நரேந்திர மோடி புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று (ஜன.4) தொடங்கி வைத்தார். கிராமப்புற இந்தியாவின் தொழில்முனைவோரின் உற்சாகம் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்டாடும் வகையில், இத்திருவிழா இன்று (ஜனவரி 4) முதல் 9 வரை ‘வளர்ச்சியடைந்த பாரதம்-2047-க்காக நெகிழ்வுத்தன்மையுடன் கொண்ட கிராமப்புற இந்தியாவை உருவாக்குதல்’ என்ற கருப்பொருளுடன் நடைபெறுகிறது.
இத்திருவிழாவை தொடங்கிவைத்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “கிராமங்களை வளர்ச்சி மற்றும் வாய்ப்புகளின் துடிப்பான மையங்களாக மாற்றுவதன் மூலம் கிராமப்புற இந்தியாவை மேம்படுத்துவதே எங்கள் நோக்கம். கடின உழைப்பு இருந்தபோதிலும், குறைந்த வளங்கள் காரணமாக கிராம மக்கள் பெரும்பாலும் வாய்ப்புகளை அணுக போராடுகிறார்கள்.
2014 முதல், ஒவ்வொரு கணமும் கிராமப்புற இந்தியாவுக்குச் சேவை செய்வதில் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். கிராமங்களில் உள்ள மக்களுக்கு கண்ணியமான வாழ்க்கையை வழங்குவதே எனது அரசின் முன்னுரிமை. கிராமப்புற இந்தியாவில் உள்ள மக்களுக்கு அதிகாரம் அளிப்பது, முன்னேறுவதற்கான வாய்ப்புகளை அவர்களுக்கு வழங்குவது, இடம்பெயர்வதைத் தடுப்பது மற்றும் அவர்களின் வாழ்க்கையை எளிதாக்குவது என்பதே எங்கள் பார்வை.
» வட இந்தியாவில் 2-வது நாளாக தொடரும் அடர் பனி மூட்டம்: டெல்லியில் விமான போக்குவரத்து பாதிப்பு
» கும்பமேளாவில் முஸ்லிம்கள் மதம் மாற்றமா? - உத்தர பிரதேச முதல்வருக்கு மவுலானா கடிதம்
இதை அடைய, ஒவ்வொரு கிராமத்திலும் அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்தும் செயல்திட்டத்தை நாங்கள் மேற்கொண்டுள்ளோம். இந்தியாவின் கிராம மக்கள் அதிகாரம் பெற வேண்டும், கிராமத்திலேயே முன்னேற அதிக வாய்ப்புகள் கிடைக்க வேண்டும். கிராமத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் சிறப்புக் கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளன. இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு, 'பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தை' மேலும் ஒரு வருடத்திற்குத் தொடர அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
உலகளவில் டிஏபி விலை அதிகரித்து, விண்ணை தொடுகிறது. ஆனால் விவசாயியின் தலையில் சுமையை ஏற்ற மாட்டோம் என்று முடிவு செய்து மானியத்தை உயர்த்தி டிஏபி விலையை சீராக வைத்துள்ளோம். நமது அரசாங்கத்தின் நோக்கங்கள், கொள்கைகள் மற்றும் முடிவுகள் கிராமப்புற இந்தியாவை புதிய ஆற்றலால் நிரப்புகின்றன.
நமது கிராமங்களில் விவசாயம் தவிர, பல்வேறு வகையான பாரம்பரிய கலைகள் மற்றும் திறன்கள் சார்ந்து பலர் வேலை செய்கிறார்கள். கிராமப்புற பொருளாதாரம் மற்றும் உள்ளூர் பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பை அவர்கள் செய்கிறார்கள். அவர்களுக்காக பிரதமர் விஸ்வகர்மா திட்டத்தை நடத்தி வருகிறோம். இந்தத் திட்டம் நாட்டின் லட்சக்கணக்கான விஸ்வகர்மாக்கள் முன்னேற வாய்ப்பளிக்கிறது.
நமது அரசாங்கத்தின் நோக்கங்கள், கொள்கைகள் மற்றும் முடிவுகள் கிராமப்புற இந்தியாவில் புதிய ஆற்றலைப் புகுத்துகின்றன! எங்கள் இலக்கு கிராமங்களில் உள்ள மக்களுக்கு அதிகபட்ச பொருளாதார உதவிகளை வழங்குவது, அவர்கள் விவசாயம் செய்வதற்கும், அவர்களின் கிராமங்களுக்குள் புதிய வேலைவாய்ப்பு மற்றும் சுய வேலை வாய்ப்புகளை அணுகுவதற்கும் உதவுவதாகும்.
இந்த தொலைநோக்கு பார்வையுடன், PM-KISAN திட்டமானது விவசாயிகளுக்கு தோராயமாக ரூ. 3 லட்சம் கோடி நிதியுதவி அளித்திருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் விவசாயக் கடன்களின் அளவு 3.5 மடங்கு அதிகரித்துள்ளது.
முந்தைய அரசாங்கங்கள் SC-ST-OBC களின் தேவைகளுக்கு கவனம் செலுத்தவில்லை. கிராமங்களில் இருந்து இடம்பெயர்தல் தொடர்ந்தது, வறுமை தொடர்ந்து அதிகரித்தது, கிராமத்திற்கும் நகரத்திற்கும் இடையிலான இடைவெளி தொடர்ந்து அதிகரித்தது. யாரும் கண்டுகொள்ளாதவர்களை மோடி வணங்குகிறார். பல பத்தாண்டுகளாக அபிவிருத்தி இல்லாமல் இருந்த பகுதிகள் இப்போது சம உரிமைகளைப் பெற்றுள்ளன.” என தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago