புதுடெல்லி: உத்தரப் பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் முகலாய மன்னர் அவுரங்கசீப் கட்டிய மாளிகையின் ஒரு பகுதி இடிக்கப்பட்டுள்ளது. இதுபோல், தனியார் வசம் உள்ள மேலும் 25 கட்டிடங்களை இடிக்கவும் திட்டமிடப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தற்போதைய உ.பி.யின் ஆக்ரா, இந்தியாவின் வரலாற்றில் சுமார் 200 ஆண்டுகள் முக்கிய இடம் பெற்றிருந்தது. இது, முகலாயர் ஆட்சியின் தலைநகராக இருந்தது. பிறகு ஆட்சியை கைப்பற்றிய ஆங்கிலேயர்கள் இந்நகரை தனது வடக்கு மேற்கு மாகாணத்தின் தலைநகரமாகவும் பயன்படுதினர்.ஆக்ராவில் தாஜ்மகால், செங்கோட்டை உள்ளிட்ட 197 வரலாற்றுச் சின்னங்கள் அமைந்துள்ளன. இவற்றை ஆராய்ந்து ஆங்கிலேயர்களில் பலரும் நூல்கள் எழுதியுள்ளனர். இவை அனைத்தும் முகலாய மன்னர்களால் 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டவை.
இவற்றில், நான்கு வரலாற்று சின்னங்கள் கடந்த மூன்று மாதங்களில் இடிக்கப்பட்டு விட்டன. அதில், முக்கிய ஒன்றாக அவுரங்கசீப் கட்டிய முபாரக் மன்ஜில் எனும் மாளிகை உள்ளது. இதன் பெரும்பாலான பகுதி இடிக்கப்பட்டுவிட்டது. இது ஆக்ராவின் யமுனை நதிக்கரையிலுள்ள பேலன்கன்ச் பகுதியில் உள்ளது. ஆங்கிலேயர்களால் நதிவழிப் போக்குவரத்துக்கான சுங்கவரி அலுவலகப் பயன்பாட்டில் இக்கட்டிடம் இருந்தது.
» சீனாவில் பரவும் புதிய வைரஸ்: தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் இந்திய சுகாதாரத் துறை!
» “சனாதனத்தை புரிந்துகொள்ளாமல் நிராகரிப்பது வக்கிரமான காலனிய மனநிலை” - ஜக்தீப் தன்கர் பேச்சு
சுதந்திரத்துக்கு பின் தனியார் வசமான இக்கட்டிடத்தின் பகுதிகளை பிரித்து வாடகை லாரி அலுவலகங்களுக்கு வாடகைக்கு விடப்பட்டிருந்தது. அவற்றில் சிலவற்றை காலி செய்து இந்த இடிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு சில நாள் முன்பாக, அக்கட்டிடத்தை உ.பி தொல்லியல் ஆய்வுத் துறையினர் பாதுகாக்கப்பட்டதாக அறிவிக்க அறிவிக்கை வெளியிடப்பட்டது. இதன் மீது ஆட்சேபனைகளும் கேட்கப்பட்டிருந்தன.
எந்த ஆட்சேபனைகளும் வராத நிலையில், அதில் உ.பி தொல்லியல் சார்பில் இரண்டு தொல்லியல் ஆய்வாளர்களான ராஜீவ் ரஞ்சன், சுபாஷ் சந்திரா ஆகியோர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வுக்கு அடுத்தநாள் இக்கட்டிடம் இடிக்கப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து பேலன்கஞ்ச்வாசியான கபில் வாஜ்பாய் செய்தியாளர்களிடம் கூறும்போது,
“இக்கட்டிடம் இடிக்கப்போவதாக நான் பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும் பலனில்லை. இந்த மாளிகையின் இடிபாடுகள் சுமார் 100 டிராக்டர்களில் ஏற்றி அகற்றப்பட்டன. இந்த இடிப்பு குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க உள்ளோம்” என்று தெரிவித்தார்.
இந்நிலையில், இடிப்பின் மீது ஆக்ரா மாவட்ட ஆட்சியர் சார்பில் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. இதற்காக அமைக்கப்பட்ட குழுவின் அறிகையில், இடிப்பிலிருந்து தப்பிய கட்டிடத்தின் மற்றொரு பகுதி பாதுகாப்பாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இக்கட்டிடத்தின் தாரா நிவாஸ் எனப்படும் வாயில் பகுதி முற்றிலுமாக இடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன் ஆக்ராவின் ஜொஹரா பாக்கிலுள்ள ஒரு கட்டிடம் தரைமட்டமானது. இக்கட்டிடமானது முகலாயர்களின் மூன்று அரசர்கள் ஆட்சியில் கட்டப்பட்டது. ஆக்ரா நெடுஞ்சாலையில் அமைந்த முகலாயர் கட்டிடத்தின் ஒரு பகுதியும் இடிக்கப்பட்டு விட்டன. இதுபோல், ஆக்ராவின் யமுனை நதிக்கரை முழுவதிலும் முகலாயர்கள் கட்டியப் பல கட்டிடங்கள் அமைந்துள்ளன. இவற்றில் மேலும் 25 கட்டிடங்களை இடிக்கவும் அதன் உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதில் முக்கியமாக, மன்னர் தாராஷிகோ கட்டிய நூலகமும் உள்ளது. ஆக்ரா நகர முனிசிபலிடம் இருந்த இக்கட்டிடம் ஆக்கிரமிப்பில் உள்ளது. இதை காலி செய்து பாதுகாக்க வேண்டியும் ஆக்ராவில் போராட்டக் குரல்கள் எழுந்தன.
முக்கிய செய்திகள்
இந்தியா
15 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago