நிதிஷ் குமாருக்கு லாலு அழைப்பு: பாஜகவுக்கு சவாலாகும் பிஹார் சட்டப்பேரவை தேர்தல்

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: தேசிய அளவில் தேசிய ஜனநாயக கூட்​ட​ணிக்கு (என்​டிஏ) தலைமை வகிக்​கிறது பாஜக. பிஹாரில் என்டிஏவுக்கு முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் தலைமை வகிக்​கிறது. சுமார் 20 வருடமாக அசைக்க முடியாத முதல்​வராக பிஹாரில் தொடர்​கிறார் நிதிஷ். இடையில் அவர் மாறிய லாலு பிரசாத் தலைமையிலான மெகா கூட்டணி ஆட்சிலும் நிதிஷ் குமாரே முதல்​வ​ரானார். பிஹாரின் கடந்த பேரவை தேர்​தலில் நிதிஷைவிட பாஜக அதிக தொகு​தி​களில் வெற்றி பெற்​றது. இருப்​பினும், நிதிஷ் முதல்வராக உள்ளார். இந்த ஆண்டு நடைபெறவுள்ள பிஹார் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்​றால் பாஜகவைச் சேர்ந்​த வரை முதல்​வ​ராக்க வேண்​டும் என்ற கோரிக்கை எழுந்​துள்ளது.

சில நாட்களுக்கு முன்பு ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்​ஜேடி) தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ், நிதிஷுக்கு மெகா கூட்​ட​ணி​யின் கதவுகள் மூடப்​பட்டு விட்​ட​தாகக் குறிப்​பிட்​டிருந்​தார். ஜனவரி 1-ல் லாலுவின் மனைவி ராப்ரி தேவிக்கு பிறந்தநாள் வந்தது. இதற்காக பிஹாரின் முன்​னாள் முதல்​வருமான ராப்​ரிக்கு பாட்​னா​வில் விழா கொண்​டாடி​னார் லாலு. இந்த விழாவில் லாலு கூறும்​போது, “பொது​மக்கள் மற்றும் முதல்வர் நிதிஷ் குமாருக்காக எங்கள் கதவுகள் எப்போதும் திறந்து வைக்​கப்​பட்​டுள்​ளது. அவர் எங்களுடன் இணைந்து பணியாற்ற வர வேண்​டும். அவர் மீண்​டும் மெகா கூட்​ட​ணி​யில் சேரவிரும்​பினால் வரலாம்” என்றார்.

கடந்த 2024-ல் நடைபெற்ற மக்கள​வைத் தேர்​தலில் பாஜக​வுக்கு பெரும்​பான்மை கிடைக்க​வில்லை. எனினும், பிஹாரில் அதன் கூட்​ட​ணி​களான ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) 12 மற்றும் சிராக் பாஸ்​வானின் லோக் ஜன சக்தி 5 உறுப்​பினர்​களின் ஆதரவுடன் மத்தியில் ஆட்சி தொடர்கிறது. இந்நிலையில், நிதிஷ் குமார் மீண்டும் மெகா கூட்டணியில் இணைந்துவிட்டால் சட்டப் பேரவைத் தேர்தல் பாஜகவுக்கு சவாலானதாக மாறிவிடும் என கூறப்படுகிறது.

நிதிஷ்குமார் பதில்: பிஹார் தலைநகர் பாட்​னா​விலுள்ள ஆளுநர் மாளி​கை​யில், புதிய ஆளுநராக ஆரிப் முகமது கான் நேற்று பதவி​யேற்​றார். இந்நிகழ்ச்​சி​யில் முதல்வர் நிதிஷ் கு​மார் பங்கேற்​றார். விழா முடிந்​ததும், ஆளுநருடன் முதல்​வரும் வந்தார். அப்போது பத்திரி​கை​யாளர்​கள், அவரிடம், லாலு பிரசாத்​தின் அழைப்பு குறித்து கேள்வி எழுப்​பினர். அதற்கு நிதிஷ் கு​மார் கூறும்​போது “நீங்கள் என்ன சொல்​கிறீர்கள் என்று எனக்​குப் புரிய​வில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுவாக உள்ளது. பாஜக​வும், ஐக்கிய ஜனதா தளமும் ஒருங்​கிணைந்து செயல்​பட்டு வருகின்றன. இது ஒரு சுதந்​திரமான சமூகம். யார் வேண்​டு​மாலும் தாங்கள் விரும்​பியதைப் பேச முடி​யும்” என்றார்.

அரசியல் இல்லை: பிஹாரின் புதிய ஆளுநர் ஆரிப் முகமது கான் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவை நேற்று முன்தினம் சந்தித்​தார். இதுகுறித்து ஆரிப் முகமது கான் நேற்று கூறும்போது, "நீங்கள் ஓர் இடத்​துக்கு சென்​றால், அங்கு உங்களுக்கு ஏற்கெனவே அறிமுக​மானவர்கள் இருந்​தால், அவர்களை சந்திக்க விரும்ப மாட்​டீர்​களா? அதுபோலத்​தான் 1975-ல் இருந்து எனக்கு தெரிந்​தவர்​​களின் ஊருக்கு வந்தவுடன் அவர்​களுடன் சிறிது நேரம் செலவிட விரும்​பினேன். இதுபற்றி நீங்கள் கேள்வி எழுப்புவது என்னை ஆச்சரியப்பட வைக்​கிறது. எல்லா​வற்​றை​யும் அரசியல் கண்ணோட்​டத்​துடன் பார்க்க வேண்​டாம்" என்றார்​.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

மேலும்