பிரதமர் மோடி ஆட்சிக்காலத்தில் நாட்டில் வேலைவாய்ப்பு 64.33 கோடியாக அதிகரித்துள்ளது என்று மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.
இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியதாவது: நாட்டில் கடந்த 2014-15-ம் ஆண்டில் வேலைவாய்ப்பு 47.15 கோடியாக இருந்தது. இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி அமைந்த பின்னர் வேலைவாய்ப்பு சதவீதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்தார்.
அதன்படி தற்போது 2023-24-ல் வேலைவாய்ப்பு சதவீதம் 36 சதவீதம் அதிகரித்து 64.33 கோடியாக அதிகரித்துள்ளது. இதன்மூலம் தேசிய ஜனநாயகக்கூட்டணி ஆட்சியில் வேலைவாய்ப்புகள் அதிகம் உருவாக்கப்பட்டுள்ளது கண்கூடாக உள்ளது.
2004-2014-ல் நடைபெற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது 2.9 கோடி வேலைவாய்ப்புகள் மட்டுமே உருவாக்கப்பட்டன. ஆனால் 2014-24 ஆட்சிக்காலத்தில் மொத்தம் 17.19 கோடி வேலைவாய்ப்புகளை பிரதமர் மோடி அரசு உருவாக்கியுள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் (2023-24) 4.6 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago