ஸ்ரீபீடம் பீடாதிபதியான ஸ்வரூபானந்தா சுவாமிகள், நேற்று காலை திருப்பதி ஏழுமலையானை தரிசித்தார். பின்னர், கோயிலுக்கு வெளியே செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
திருப்பதி தேவஸ்தானத்தில் அர்ச்சகர்கள், அதிகாரிகளுக்கு இடையே மோதல் போக்கு காணப்படுவதாலேயே, ஏழுமலையான் கோயில் குறித்து பல விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
உலக பிரசித்தி பெற்ற திருப்பதி தேவஸ்தானத்தில் ஏற்பட்டுள்ள தற்போதைய சூழலை மிகவும் ஜாக்கிரதையாக கையாள வேண்டும். அர்ச்சகர்கள், தேவஸ்தான அதிகாரிகள், அறங்காவலர் குழுவினர் மற்றும் அரசு அதிகாரிகள் அடங்கிய குழுஅமைத்து பிரச்சினையை தீர்க்க, ஆந்திர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு ஸ்வரூபானந்தா கூறினார்.
கென்யா நாட்டின் முன்னாள் பிரதமர் ரெய்லா ஒடிங்கா, நேற்று காலை தனது குடும்பத்தாருடன் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் தரிசன ஏற்பாடுகள் செய்து, ரங்கநாயக மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கி கவுரவித்தனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago