ஜனவரி 10-ம் தேதிக்குள் 1.77 கோடி பேருக்கு இலவச வேட்டி-சேலை: திருப்பதியில் அமைச்சர் ஆர்.காந்தி உறுதி

By என். மகேஷ்குமார்

திருப்​பதி: பொங்கல் பண்டிகைக்கு தமிழகத்​தில் 1.77 கோடி பேருக்கு வரும் ஜனவரி 10-ம் தேதிக்​குள் இலவச வேட்டி மற்றும் சேலைகள் விநி​யோகம் செய்​யப்​படும் என நேற்று திருப்​ப​திக்கு வந்திருந்த தமிழ்​நாடு கைத்தறி மற்றும் ஜவுளித்​துறை அமைச்சர் ஆர்.காந்தி தெரி​வித்​தார்.

திருப்பதி காந்தி ரோட்​டில் புதுப்​பிக்கப்பட்ட கோ-ஆப் டெக்ஸ் கைத்தறி விற்பனை நிலையத்தை நேற்று தமிழ்​நாடு கைத்தறி மற்றும் ஜவுளித்​துறை அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்தார். அப்போது அவர் பேசி​ய​தாவது: தமிழக அரசின் கோ - ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் தமிழகத்​தில் மட்டுமல்​லாது நமது அண்டை மாநிலங்​களில் கூட நல்ல வரவேற்பை பெற்றுள்​ளது.

தமிழகத்​தில் மொத்தம் 150 விற்பனை நிலையங்கள் உள்ளன. இது தவிர ஆந்திரா​வில் 8 மற்றும் தெலங்​கானா​வில் 3 விற்பனை நிலையங்களும் உள்ளன. இவை காலத்​திற்கு ஏற்ப புதுப்​பிக்​கப்​பட்டு வருகின்றன. நாங்கள் ஆட்சிக்கு வரும்​போது, கோ-ஆப்​டெக்ஸ் மிகவும் நஷ்டத்​தில் இயங்கி வந்தது. இதனை லாபகரமாக கொண்டு செல்லவே தற்போது புதுப்​பிக்​கும் பணிகள் நடைபெற்று வருகிறது. காலத்​திற்கு ஏற்ப தற்கால இளைஞர்களை கவரும் விதத்​தில் டிசைன்கள் செய்து விற்பனை செய்​யப்​படு​கின்றன.

பொங்கல் பண்டிகைக்காக 1 கோடியே 77 லட்சத்து 64 ஆயிரம் சேலைகளும், 1 கோடியே 22 லட்சம் வேட்​டிகளும் தயாரித்து விநி​யோகம் செய்​யும் பணிகள் மும்​மரமாக நடைபெற்று வருகிறது. இதில் தற்போது வரை 51 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டன. வரும் ஜனவரி 10-ம் தேதிக்​குள் தமிழகத்​தில் அனைவருக்​கும் இலவச சேலைகள் மற்றும் வேட்​டிகள் விநி​யோகம் செய்​யப்​படும். யாருமே எங்களுக்கு கிடைக்கவில்லை என குறை கூறாத வகையில் அவை ரேஷன் கடைகள் மூலம் விநி​யோகம் செய்​யப்​படும்.

நான் 31 ஆண்டு​களாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 31-ம் தேதி திரு​மலைக்கு வந்து விடு​வேன். ஜனவரி மாதம் 1-ம் தேதி திருப்பதி ஏழுமலை​யானை தரிசிப்பதை வழக்​கமாக கொண்​டுள்​ளேன். இவ்வாறு தமிழ்​நாடு கைத்தறி மற்றும் ஜவுளித்​துறை அமைச்சர் ஆர். காந்தி பேசினார். இந்நிகழ்ச்​சி​யில், திருப்பதி எம்.எல்.ஏ ஆரணி ஸ்ரீநிவாசுலு, முன்​னாள் எம்.எல்.ஏ சுகுணம்​மாள் உட்பட பலர் பங்​கேற்​றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்