முன்னாள் பிரதமரும், மஜத கட்சியின் தலைவருமான தேவகவுடா, திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக ஹைதராபாத் வந்திருந்தார். பின்னர் அவர் தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவை சந்தித்தார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் தேவகவுடா கூறும்போது, “தெலங்கானா மாநிலத்தில் விவசாய நலத் திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்படுகின்றன. இந்த திட்டங்களை கர்நாடகாவிலும் விரைவில் அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படும். தெலங்கானாவில் நீர்ப்பாசனம் மற்றும் குடிநீர் திட்டங்களை இவ்வளவு விரைவாக அமல்படுத்தியது ஆச்சரியம் அளிக்கிறது. நாட்டில் மாநில கட்சிகளே பலம் வாய்ந்தவையாக உள்ளன. மாநிலக் கட்சிகளின் மீதுதான் மக்களுக்கு அதிக நம்பிக்கை உள்ளது. இதனை நாடாளுமன்ற தேர்தலில் மாநிலக் கட்சிகள் கூட்டாக இணைந்து நிரூபித்து காட்ட வேண்டும்” என்றார்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜக.வைத் தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் ஒன்றுசேர்ந்து போட்டியிட வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்று வருகிறது. இதற்கான முயற்சியில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உட்பட பலர் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago