கேரள இரட்டைக் கொலை: மார்க்சிஸ்ட் முன்னாள் எம்எல்ஏ உட்பட 14 பேர் குற்றவாளிகளாக அறிவிப்பு

By செய்திப்பிரிவு

கேரளாவில் நடந்த இரட்டைக் கொலை வழக்கில் மார்க்சிஸ்ட் முன்னாள் எம்எல்ஏ உட்பட 14 பேர் குற்றவாளிகள் என சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் பெரியா பகுதியைச் சேர்ந்தவர் கிரிபேஷ், சரத் லால். இவர் இருவரும் காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி பிரிவில் கட்சிப் பணியாற்றி வந்தனர். இதனிடையே, இப்பகுதியில் காங்கிரஸ் கட்சியினருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம்.

இந்நிலையில் அரசியல் பகை காரணமாக கடந்த கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 17-ம் தேதி நடந்த தகராறில் கிரிபேஷ், சரத் லால் ஆகியோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரால் படுகொலை செய்யப்பட்டனர்.

கேரள உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் கேரள மாநில அரசு இந்த இரட்டைக் கொலை வழக்கை, 2019-ம் ஆண்டு அக்டோபர் 23-ம் தேதி சிபிஐ வசம் ஒப்படைத்தது.

இந்த வழக்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏவும் மாவட்டத் தலைவருமான கே.வி. குன்ஹிராமன், கன்ஹான்கட் பிளாக் பஞ்சாயத்து தலைவர் கே. மணிகண்டன், மார்க்சிஸ்ட் கட்சியின் பெரியா பகுதி தலைவர் ஏ. பீதாம்பரன், பாக்கம் பகுதி முன்னாள் செயலர் ராகவன் வெலுதோளி உள்ளிட்ட 24 பேர் கைது செய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏவும் மாவட்டத் தலைவருமான கே.வி. குன்ஹிராமன் உள்ளிட்ட 14 பேரும் குற்றவாளிகள் என சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மீதமுள்ள 10 பேர் வழக்கிலிருந்து விடுக்கப்பட்டனர். தண்டனை விவரத்தை சிபிஐ நீதிமன்றம் வரும் ஜனவரி 3-ம் தேதி அறிவிக்கவுள்ளது.

இந்நிலையில் 14 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதற்கு கொலை செய்யப்பட்ட சரத் லாலின் தந்தை சத்யநாராயணன் வரவேற்பு தெரிவித்துள்ளார். மேலும் விடுவிக்கப்பட்ட 10 பேர் மீது வழக்கு தொடர சட்ட ஆலோசகருடன் கலந்தாலோசனை நடத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்