“நான் ஒரு குக்கிராமத்தில் பிறந்தேன். அந்த கிராமம் இப்போது இந்தியாவில் இல்லை. மிக இளம்வயதிலேயே வீடு, உடைமைகளை இழந்தேன். அகதியாக இந்தியாவுக்கு வந்தேன். இறுதியில் அசாமில் எனக்கு ஒரு வீடு கிடைத்தது. இதற்காக அசாம் மக்களுக்கு நான் என்றென்றும் கடமைபட்டிருக்கிறேன்" என்று கடந்த 2012-ம் ஆண்டில் மன்மோகன் சிங் கூறினார்.
அசாமின் குவாஹாட்டி நந்தன் நகரில் உள்ள 2 படுக்கை அறைகள் கொண்ட வீடு கடந்த 30 ஆண்டுகளாக மன்மோகன் சிங்கின் முகவரியாக இருந்து வருகிறது. இந்த வீட்டின் முகவரியில்தான் அவரது வாக்காளர் அட்டை உட்பட அனைத்து அடையாள அட்டைகளும் உள்ளன. இந்த வீட்டில் அவர் நிரந்தரமாக வாழவில்லை. ஆனால் இதுதான் அவரது முகவரி. முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் ஆட்சிக் காலத்தில் மன்மோகன் சிங் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டார். அப்போது அவர் அசாமில் இருந்து மாநிலங்களவை எம்பியாக நியமிக்கப்பட்டார். அப்போதுமுதல் குவாஹாட்டி அவரது 2-வது தாய்வீடாக மாறியது.
இது குறித்து அசாமின் முன்னாள் முதல்வர் ஹிதேஸ்வர் சைகியாவின் மனைவி ஹேமோபிரவா கூறியதாவது: கடந்த 1991-ம் ஆண்டு அசாமில் இருந்து மாநிலங்களவை எம்பியாக மன்மோகன் சிங் தேர்வு செய்யப்பட்டார். இதை எதிர்த்து சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அவருக்கு அசாமில் வீடு கிடையாது, முகவரி கிடையாது. அவர் எப்படி அசாமில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்படலாம் என்று பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன.
அப்போது எங்களது வீட்டை ரூ.700 வாடகையில் மன்மோகன் சிங்குக்கு வழங்கினோம். அந்த வீடு எனது பெயரில் இருக்கிறது. கடந்த 1991-ம் ஆண்டு முதல் மன்மோகன் சிங்கின் முகவரியாக எங்கள் வீடு இருக்கிறது. ஒவ்வொரு தேர்தலின்போதும் அவர் குடும்பத்தோடு குவாஹாட்டி வந்து வாக்களிப்பது வழக்கம்.
» ஆதார், ஆர்டிஐ, 100 நாள் வேலை... மன்மோகன் சிங் சத்தமின்றி வித்திட்ட புரட்சிகள்! - ஒரு பார்வை
» மன்மோகன் சிங் நிதியமைச்சர், பிரதமர் ஆனது ஏப்படி? - வியத்தகு அரசியல் பின்னணி
மன்மோகன் சிங் மிகவும் எளிமையான மனிதர். ஒவ்வொரு முறை குவாஹாட்டி வீட்டுக்கு வரும்போது எங்கள் குடும்பத்தோடு பேசுவார். எங்களோடு சேர்ந்து சாப்பிடுவார். எங்கள் வீடு 2 படுக்கை அறைகள் கொண்ட மிகச் சிறிய வீடு. அவர் பிரதமரான பிறகு சொகுசு பங்களாக்களை வழங்க பலர் முன்வந்தனர். ஆனால் அவற்றை மன்மோகன் சிங் விரும்பவில்லை. எங்கள் வீட்டையே அவரது முகவரியாக பயன்படுத்தி வந்தார்.
ஒவ்வொரு மாதமும் வாடகையை அவர் காசோலையாக வழங்குவார். அவர் பிரதமராக இருந்தபோதும் வாடகையை காசோலையாக வழங்கினார். ஒருமுறை நாங்கள் காசோலையை பணமாக்க மறந்துவிட்டோம். அதை கடிதம் மூலம் அவர் நினைவூட்டினார். எங்களது வீட்டை இனிமேல் யாருக்கும் வழங்க மாட்டோம். அந்த வீடு இறுதிவரை மன்மோகன் சிங்கின் நினைவு இல்லமாக விளங்கும். இவ்வாறு ஹேமோபிரவா தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
55 mins ago
இந்தியா
35 mins ago
இந்தியா
53 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
6 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago