புதுடெல்லி: திடீர் உடல்நலக்குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் டெல்லியில் உள்ள எய்மஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவரது உடல்நிலை குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் எதையும் மருத்துவமனை நிர்வாகம் வெளியிடவில்லை. காங்கிரஸ் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் பலரும் அவர் விரைவில் மீண்டு வர வேண்டும் என்று தங்கள் சமூக வலைதளங்கள்ல் பதிவிட்டு வருகின்றனர்.
முன்னாள் ராஜஸ்தான் முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான அசோக் கெலாட், "முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் ஜியின் உடல்நிலை குறித்து ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளேன். அவர் விரைவில் குணமடைந்து நலமுடன் இருக்க வாழ்த்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
மன்மோகன் சிங் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதையடுத்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல், பிரியங்கா மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.
» ‘அண்ணாமலை போராட்ட அறிவிப்புகள் நகைப்புக்குரியவையாக மாறிவிடக்கூடாது’ - திருமாவளவன்
» 7 எபிசோடுகள் உடன் ‘ஸ்குவிட் கேம்’ சீசன் 2 ரிலீஸ்! - ரசிகர்கள் ஆர்வம்
முக்கிய செய்திகள்
இந்தியா
7 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago